ஐபிஎல் போட்டியில் மிகவும் முக்கியாயமான அணிகளில் ஓன்று ஆர்சிபி. இந்த அணியின் பல ஆண்டுகளா நட்சத்திர வீரராக இருந்த யுஸ்வேந்திர சாஹலை ஆர்சிபி அணியானது 2021 ஆம் ஆண்டு மட்டும் வரையில் தான் விளையாடினார். அதற்கு பிறகு வந்த மெகா ஏலத்தில் ஆர்சிபி அணியானது யுஸ்வேந்திர சாஹலை ஏலத்தில் விடுவிக்கப்பட்ட போது அனைத்து ஐபிஎல் ரசிகர்களுக்கும் மிகப்பெரிய அதிர்ச்சியாக இருந்தது.

ஏனென்றால் யுஸ்வேந்திர சாஹல் ஆர்சிபி அணிக்காக பல முறை முக்கியமான விக்கெட்டுகளை எடுத்து கொடுத்துள்ளார். குறிப்பாக பந்துவீச்சாளர்கள் விக்கெட்டுகளை எடுக்க தவிக்கும் போது திடீரென உள்ளே வந்து விக்கெட்டுகளை எடுத்து பாராட்டுகளை பெறுவார். மேலும் பெங்களூரு அணிக்காக 114 போட்டிகளுக்கும் மேலே ஆடியுள்ள அவரை பின்னர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது 6.50 கோடிக்கு ஏலம் எடுத்த நிலையில் அந்த அணிக்காக 2 வருடங்களாக அவர் விளையாடி வருகிறார்.
யுஸ்வேந்திர சாஹல் பேட்டி :
இப்படிப்பட்ட நிலையில் தான் யுஸ்வேந்திர சாஹல் சமீபத்தில் கொடுத்த பேட்டியில் ஆர்சிபி அணி தன்னை விடுவித்த போது எப்படி இருந்தது எப்படி பற்றி பேசியிருக்கிறார். இது பற்றி அவர் கூறுகையில் “உண்மையிலேயே நான் அதிகம் வருத்தப்பட்டேன். ஆர்சிபி அணியில் என்னுடைய பயணம் கடந்த 2014ஆம் ஆண்டு தொடங்கியது. விராட் கோலி என் மீது அதீத நம்பிக்கை வைத்திருந்தார். ஆனால் அவர்கள் என்னை அணியில் மீண்டும் எடுக்காதது கோபம் தான்.

நான் 8 ஆண்டுகளாக ஆர்சிபி அணிக்காக விளையாடி இருக்கிறேன். “சாஹல் நிறைய பணம் கேட்டிருப்பார்’ என்று மக்கள் சொல்வதையும் இதுபோன்ற விஷயங்களையும் பார்த்தேன். நான் எதையும் கேட்கவில்லை. நான் எவ்வளவு தகுதியானவன் என்று எனக்குத் தெரியும். மிக மோசமான விஷயம் என்னவென்றால், RCB லிருந்து எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு கூட வரவில்லை. அவர்கள் என்னிடம் எதுவும் சொல்லவில்லை. அது எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது என்றார் யுஸ்வேந்திர சாஹல்.
மேலும் அவர் பேசுகையில் “நான் 114 போட்டிகளை ஆர்சிபி அணிக்காக விளையாடி இருக்கிறேன். ஆனால் என்னால் அவர்கள் எனக்கு சரியான கருத்துக்களை கொடுக்கவில்லை. ஏலத்தில் எனக்காக எந்த எல்லைக்கும் செல்வதாக சத்தியம் செய்தார்கள். ஆனால் அவர்கள் என்னை அணியில் எடுக்காததால் மிகுந்த கோவம் அடைந்தேன். எனக்கு சின்னசாமி மைதானம் மிகவும் விருப்பமான ஒரு மைதானம்.
Yuzvendra Chahal in The Ranveer Show said,
— Niya's CrickFun (@TheCrickFun) July 15, 2023
"I was very angry when I was not in the retention list of RCB before the Mega Auction in 2022. Nobody even contacted me from there. I didn't talk to anyone in my first RCB vs RR game." pic.twitter.com/rcIDWpqUy0
இதற்க்கு என்ன என்ன நடந்தாலும் அது நல்லதாகவே நடந்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இணைந்த பிறகு நான் டெத் பவுலராக விளையாடினேன். நான் தொடக்கத்தில் டெத் பவுலராகத்தான் இருந்தேன். ஆரசிபியில் அதிகபட்சமாக 16 அல்லது 17 ஓவர் வரையில் பந்து வீசினேன். ராஜன்தான் அணியானது என்னுடைய கிரிக்கெட் வரல அதிகமாக உதவி செய்தது.
அப்போதுதான் புரிந்து கொண்டேன் என்ன நடந்தாலும் ஒரு வீரர் 10 வருடங்களுக்கு மேலே ஒரு அணியில் ஆடிய பிறகு அடுத்த வீரரை அந்த அணி தேடும் என்று. ஒரு தொழில்முறை பந்துவீச்சாளராக இது போன்ற விஷயங்களை சமாளிக்க வேண்டும் என்றார் யுஸ்வேந்திர சாஹல் .





