சென்னை அணியின் கேப்டன் தோனி தமிழக வீரர் நடராஜனின் குழந்தையிடம் கொஞ்சி பேசிவரும் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. தோனி சென்னை அணிக்காக பல வருடங்களாக விளையாடி கொண்டுள்ளார். அவர் சென்னை அணிக்காக 4 முறை சாம்பியன் பட்டத்தையும் வாங்கி கொடுத்துள்ளார். இவருக்கு சென்னை மட்டுமல்லாமல் உலக முழுவதும் ரசிகர் பட்டாளம் அதிகமாகவே உண்டு. இவர் இந்திய அணிக்கு கேப்டனாகவும் விளையாடி அனைத்து விதமான கோப்பைகளையும் கைப்பற்றி உள்ளார். இவர் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியை வென்ற பிறகு கூறுகையில் “இது தான் என்னுடைய விளையாட்டின் கடைசி கட்டம் என்றும் அதை நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்” என்றும் கூறியுள்ளார். இது ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஐபிஎல் 2023 க்கான 29 லீக் போட்டியில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் சென்னை அணியும் சன்ரைசஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி முதலில் பௌலிங்கை தேர்வு செய்தார். அற்புதமாக பந்து வீசிய சென்னை ஆரம்பம் முதலே ஆதிக்கத்தை செலுத்தி வந்தனர். கடந்த போட்டிகளில் சென்னை அணிக்கு பௌலிங் சரியாகவே இல்லாமல் இருந்தது, ஆனால் அதை இந்த போட்டியில் சிறப்பாக அமைந்தது.
சன்ரைசஸ் அணிக்கு ஆரம்பம் முதலே சொதப்பி வந்தன. 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 134 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. சென்னை அணியின் பேட்ஸ்மேன்கள் நிதானமாக விளையாடி வந்தனர். ரஹானே 9 ரன்களிலே வெளியேற ,இம்பேக்ட் பிளேயராக அம்பதி ராய்டு உள்ளே வந்தார். வெற்றி கையில் இருந்த நிலையிலும் அம்பதி ராய்டு அவுட்டாகி வெளியேறினார். கான்வே மட்டுமே நிலைத்து நின்று அணியை 7 விக்கெட்டுகள் வெற்றி பெற செய்தார் .
நடராஜன்
நடராஜன் 2017-ம் ஆண்டு பஞ்சாப் அணியில் இடம்பெற்றார், இருப்பினும் அவருக்கு சரிவர வாய்ப்பு கிடைக்காமலே இருந்தது. அதன் பின்பு 2018-ம் ஆண்டு தான் ஹைதராபாத் அணியில் அணியில் இடம் பெற்று சிறப்பான ஆட்டத்தை காட்டி வந்தார், யார்க்கர் கிங் என்ற பட்டமும் அவரை வந்து சேர்ந்தது. அந்த வாய்ப்புகளை சரியான முறையில் பயன்படுத்தி கொண்டு இந்தியன் அணியில் 2020-ம் ஆண்டு அணியில் சேர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதன் பின் ஏற்பட்ட காயத்தால் அணியில் இடம் பெற முடியவில்லை.
Cutest Video of MS Dhoni 😍
— ashMSDIAN (@ashMSDIAN7) April 22, 2023
He is Such a Baby around Babies 💛pic.twitter.com/EgUgRtHmIq
நடராஜனுக்கு இந்த வருடம் ஐபிஎல் போட்டிகளும் சரியாகவே அமையவில்லை, 4 போட்டிகள் மட்டுமே விளையடி 3 விக்கெட்டுகள் மட்டுமே எடுத்துள்ளார் அது மட்டுமல்லாமல் 140 ரன்களையும் கொடுத்துள்ளார். இவருக்கு சென்னை அணிக்கு எதிரான போட்டியில் பங்கேற்கவில்லை. நடராஜன் போட்டியை குடும்பத்துடன் கண்டு களித்தார். போட்டிக்கு பின் தான் தோனி நடராஜனின் குழந்தையுடன் பேசும் வீடியோ அழகாக இருக்கு என இணையத்தில் பரவி வருகிறது.





