நேற்று டெல்லி அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையே நடந்த ஐபிஎல் தொடரின் 28வது போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று முதல் வெற்றியை பதிவு செய்தது. டெல்லியின் இந்த வெற்றியை மேலும் சிறப்பிக்கும் வகையில், இந்த போட்டியை ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டிம் குக்கும் நேரில் வந்து பார்த்தார். அவருடன் நடிகை சோனம் கபூர் மற்றும் அவரது கணவர் ஆனந்த் அஹுஜா ஆகியோர் அணிகளை உற்சாகப்படுதினர்.

டெல்லி அணி முதல் வெற்றியை பெற்றது
ஐபிஎல் 2023 இன் 28வது போட்டியில், டெல்லி கேப்பிடல்ஸ் அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி முதல் வெற்றிப்பெற்று வெற்றி பயணத்தைத் தொடங்கியது. ஏனெனில் இதுவரை நடந்த போட்டிகளில் கூட டெல்லி அணியால் வெற்றி பெற முடியவில்லை, தொடர்ந்து தோல்வியில் இருந்த நிலையில் முதல் வெற்றியை பெற்றது. டாஸ் வென்று ஆட்டத்தை வென்ற டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு நேற்று சரியான நாள். டாஸ் வென்ற டெல்லி பந்துவீச முடிவு செய்து, முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவரில் 127 ரன்கள் எடுத்தது.

இந்த நேரத்தில் கொல்கத்தா அணி ஜேசன் ராய்க்கு ஒரு வாய்ப்பைக் கொடுத்தது, அவர் 39 பந்துகளில் 43 ரன்கள் எடுத்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் டெல்லி அணி ஆரம்பத்தில் எளிதாக வெற்றியை நோக்கி நகர்ந்தது. ஆனால் டேவிட் வார்னர் அவுட் ஆனவுடன் அந்த அணி சிதறத் தொடங்கியது. இறுதியில் டெல்லி அணிக்கு 6 பந்துகளில் 7 ரன்கள் என்ற நிலையில், அக்சர் படேல் வெற்றியை தந்தார். அக்ஷர் 22 பந்துகளில் 19 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு புதிய கிளைகளை தொடங்கினார், அதன் கீழ் அவர் இந்தியாவில் இரண்டு ஆப்பிள் ஸ்டோர்களை திறந்தார். மும்பையில் முதல் கிளையை திறந்து சில மணி நேரங்களுக்குப் பிறகு, ஆப்பிள் தனது இரண்டாவது ஆப்பிள் ஸ்டோரை டெல்லியின் திறந்தார், ஐபிஎல் போட்டியின் போது மைதானத்திற்கு வருகை தந்தார்.

அருண் ஜெட்லி மைதானத்தில் நடந்த போட்டியை அவர் மிகவும் ரசித்து பார்த்தார். அதன் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் பரவி வருகிறது.





