இந்தியன் பிரீமியர் லீக்கில் லீக்கின் 37வது ஆட்டத்தில் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. இப்போட்டியானது சாவை மான்சிங் மைதானத்தில் நடைபெற்றது.டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடர் இரு தோல்விகளில் இருந்து மீண்டு வர இப்போட்டி தேவை பட்டது. முதலில் களமிறங்கிய ஜெய்ஸ்வால் மற்றும் பட்லர், முதல் பந்தை பவுண்டரிக்கு அடித்து ஆட்டத்தை ஆரம்பித்தார் ஜெயஸ்வால்.

சென்னை அணியின் பௌலிங்கை ஆரம்பம் முதலே ராஜஸ்தான் அணி எளிதாக எதிர்கொண்டு வந்தன. இருவரும் ஜோடி சேர்ந்து 4.3 ஓவர்களிலே 50 ரன்களை பூர்த்தி செய்தார்கள். அபாரமாக விளையாடி வந்த ஜெயஸ்வால் 26 பந்துகளிலே அரை சதத்தை அடித்து அற்புதமாக விளையாடி வந்தார். 27 ரன்களில் வெளியேற, அதன் பின் வந்த அனைவரும் சென்னை அணியின் பௌலிங்கை அனைத்து பக்கங்களிலும் அடித்து அற்புதமாகவே விளையாடி வந்தார். அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் 13 ரன்களில் வெளியேற, அவருடனே ஜெய்ஸ்வால் அவரும் வெளியேறினார்.
இந்நிலையில் இருந்து சென்னை அணி பௌலிங்ங்கின் மூலம் போட்டியினுள் வர ஹெட்மயர் சொற்ப ரன்களில் வெளியேறினார். அதன் பிறகு வந்த படிக்கல் அணியின் ஸ்கோரை மட மடவென உயர்த்தி வர அவருடன் இணைந்த ஜோரேல் ரன்களை குவித்து வந்தார். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 202 ரன்களை குவித்தது அபாரமாக விளையாடியது ராஜஸ்தான் அணி.

203 என்ற இமாலய இலக்குடன் களம் கண்ட ருதுராஜ் மற்றும் கான்வே ஆரம்பத்தில் ராஜஸ்தான் அணியின் பௌலிங்கை சமாளிக்க முடியாமல் திணறியே வந்தனர். திணறிய நிலையிலே கான்வே 8 ரன்களில் விக்கெட்டை இழந்து வெளிறினார், அதன் பின்னரே நிதானமாக விளையாடி வந்த ருதுராஜ் 47 ரன்களில் வெளியேற சென்னை அணி ரன்களை உயர்த்த முடியாமல் கஷ்டப்பட்டு வந்துள்ளது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரஹானே மற்றும் அம்பதி ராயுடு சென்னை அணிக்கு ஏமாற்றத்தையே அளித்தனர். அதன் பின் டுபே உடன் இணைந்த மொயின் அலி அணிக்கு நம்பிக்கை தரும் வகையில் சில ஷாட்களை அடித்து வந்தனர்.

இருவரும் இணைந்து 25 பந்துகளில் 50 ரன்களை பூர்த்தி செய்த உடனே மொயின் அலி விக்கெட்டை இழந்து வெளியேற, டுபே நிதானமாக விளையாடி அரை சதத்தை பூர்த்தி செய்தார். இருப்பினும் சென்னை அணி இந்த நிலையில் இருந்தே தோல்வியின் அருகிலே சென்றது. 20 ஓவர் முடிவில் 170 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. 32 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது.





