ஐபிஎல் 2023 க்கான 29 லீக் போட்டியில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியும் சன்ரைசஸ் ஹைதராபாத் அணியும் மோதின. சன்ரைசஸ் அணி சேப்பாக்கம் மைதானத்தில் ஒரு முறை கூட சென்னை அணிக்கு எதிராக வென்றது கிடையாது. டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி முதலில் பௌலிங்கை தேர்வு செய்தார். அதன் படி சன்ரைசஸ் அணியின் தொடக்க அட்டகரர்களான ப்ரூக் மற்றும் அபிஷேக் களமிறங்கினார்கள்.

சென்னை அணியின் பௌலிங்கை சமாளித்து நிதானமாகவே விளையாடி ரன்களை சேர்த்தனர். ப்ரூக் ரன்களை உயர்த்தும் முயற்ச்சியில் ஆகாஷ் சிங்கிடம் விக்கெட்டை இழந்து வெளியேறினார். இந்நிலையில் சென்னை அணியின் பௌலிங்கை சமாளிக்க கஷ்டப்பட்டு வந்த நிலையில் தான் ஜடேஜா வீசிய பந்தில் அபிஷேக் 34 ரன்களிலே வெளியேறினார். அடுத்தடுத்து வந்த வீரர்கள் வந்த நிலையிலிருந்தே சென்னை அணியின் பந்து வீச்சை விளையாட முடியாமல் திணறி வந்தனர். ரவீந்திர ஜடேஜா அடுத்தடுத்து 3 ஓவர்களில் சுழலில் சிக்கி த்ரிப்பாதி, மயாங்க் அகர்வால் விக்கெட்டை இழந்தனர்.
அணியின் கேப்டன் மார்க்ரம் ஜொலிப்பர் என எதிர் பார்த்த நிலையில் தீக்ஷானா விடம் 12 ரன்களிலே வெளியேறினார். அற்புதமாக பந்து வீசிய சென்னை ஆரம்பம் முதலே ஆதிக்கத்தை செலுத்தி வந்தனர். கடந்த போட்டிகளில் சென்னை அணிக்கு பௌலிங் சரியாகவே இல்லாமல் இருந்தது, ஆனால் அதை இந்த போட்டியில் சிறப்பாக அமைந்தது. சன்ரைசஸ் அணிக்கு ஆரம்பம் முதலே சொதப்பி வந்தன. 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 134 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது.

135 ரன்களை இலக்காக களமேரங்கிய கன்வே மற்றும் ருதுராஜ் ,முதல் பந்திலே இருந்து அதிகம் செலுத்தும் வைகையில் முதல் பந்திலே பவுண்டரிக்கு அடித்தார் ருதுராஜ். அவருடன் இணைந்த கான்வே ஹைதராபாத் அணியின் பௌலர்களை நன்றாகவே அடித்து வந்தனர். 6 ஓவர்கள் முடிந்த நிலையில் சென்னை அணி விக்கெட் இழப்பின்றி 60 ரன்களை குவித்தது. அற்புதமான இன்னிங்சை தொடங்கி விளையாடி கொண்டிருந்த ருதுராஜ் யாரும் எதிர்பார்க்காத நிலையில் ரன் அவுட் ஆகி வெளியேறினார்.

அதன் பின் சென்னை அணியின் பேட்ஸ்மேன்கள் நிதானமாக விளையாடி வந்தனர். ரஹானே 9 ரன்களிலே வெளியேற ,இம்பேக்ட் பிளேயராக அம்பதி ராய்டு உள்ளே வந்தார். வெற்றி கையில் இருந்த நிலையிலும் அம்பதி ராய்டு அவுட்டாகி வெளியேறினார். இறுதி வரை நன்றாக விளையாடிய கன்வே அணியின் வெற்றியை உறுதி செய்தார், அவர் 57 பந்துகளில் 77 ரன்களை அடித்து சென்னை அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்தார். ஜடேஜாவின் சுழலில் சிக்கிய ஹைதராபாத் அணி.





