போட்டியின் இடையில் பத்திரான ஓவர் வீசும் வரும்போது நடுவர்களிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்ட தோனி. ஐபிஎல் 2023 க்கான குவலிப்பைர் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோதின. இதில் வெற்றி பெரும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும். தோல்வி அடையும் அணிக்கு மற்றொரு வாய்ப்பு உள்ளது. டாஸ் வென்ற குஜராத் அணி பெளலிங்கை தேர்வு செய்தார்.

அதன் படி களமிறங்கிய சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ருதுராஜ் மற்றும் கான்வே அணிக்கு நிதானமான தொடக்கத்தையே கொடுத்தனர். 4 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 31 ரன்களை அடித்து இருந்தனர். அதன் பிறகு அதிரடி ஆட்டத்தை தொடங்கினார்கள். 36 பந்துகளில் பந்துகளிலே தனது அரை சதத்தை பூர்த்தி செய்தார் ருதுராஜ். அந்த நிலையில் அதிரடியாக விளையாட நினைத்து 60 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார் அதன் பின் வந்த துபே 1 ரன் எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்தார்.
குஜராத் அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் சென்னை அணியின் பேட்ஸ்மேன்கள் திணறியே வந்தனர். சிறப்பான பந்து வீச்சின் மூலம் சென்னை அணியின் பேட்ஸ்மேன்களை திணற வைத்து வந்தனர். 17 ஓவர்கள் முடிந்த நிலையில் 4 விக்கெட் இழந்து 137 ரன்களை மட்டுமே அடித்திருந்தனர். 17 ரன்கள் இருந்த நிலையில் ராயுடு அவுட்டாகி வெளியேற, சென்னை அணியின் கேப்டன் தோனி களமிறங்கினார். தோனி வந்த வேகத்திலேயே 1 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். 20 வது ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்களை இழந்த நிலையில் 172 ரன்களை மட்டுமே குவிக்க முடிந்தது.

173 ரன்களை எடுத்தால் வெற்றி என்று களமிறங்கிய குஜராத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் கில் மற்றும் சாஹா நிதானமான தொடக்கத்தையே கொடுத்தனர். இருப்பினும் 12 ரன்களில் சாஹா அவுட்டாகி வெளியேறினார். ஹர்திக் பாண்டியா 8 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். குஜராத் அணியின் ஆட்டக்காரர்கள் சென்னை அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் சிரமப்பட்ட வந்தார். ஷனகா 17 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

இந்நிலையில் தான் 16 வது ஓவரை வீசிய வந்த பத்திரானவை தடுத்து நிறுத்தினர் கள நடுவர்கள். ஆகையால் சென்னை அணியின் கேப்டன் தோனி நடுவர்களிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். அதற்க்கான காரணம் என்னவென்றால் 12 வது ஓவரை வீசிய பிறகு பத்திரான உடல் சோர்வு காரணமாக பெவிலியன்னில் ஒய்வு எடுத்திருந்தார். அதன் பின் 16வது ஓவரை வீச வந்தார் அதற்க்கு நடுவர்கள் தடுத்து நிறுத்த, அதற்க்கான காரணமாக நடுவர்கள் கூறியது என்னவென்றால் ஒரு வீரர் பெவிலியனுக்கு சென்று மீண்டும் போட்டிக்கு வர வேண்டும் என்றால்,

அந்த வீரர் 8 நிமிடங்களுக்குள் திரும்ப களத்திற்கு வரவேண்டும், ஆனால் அவர் 9 நிமிடங்கள் அவர் பெவிலியனில் இருந்தார். 8 நிமிடங்களுக்கு மேல் பெவிலியனில் இருந்தால் அந்த வீரர் அவ்வளவு நேரம் மைதானத்தில் பீல்டிங் செய்ய வேண்டும் என்றும், அதற்காக தான் நடுவர்கள் தடுத்து நிறுத்தினர். அதன் பிறகு தோனி மற்றும் அணியின் முக்கிய வீரர்கள் வந்து பேசிய உடன் பத்திரானவை பந்து வீச அனுமதித்தனர். இறுதியில் குஜராத் அணியை 157 ரன்களில் சுருட்டி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.





