ஐபிஎல் 2023 இறுதிப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரரான அம்பதி ராயுடு 19*(8) ரன்களை குவித்ததற்காக முன்னாள் இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் முகமது கைஃப் அவரை பாராட்டினார். 13வது ஓவரில் மோஹித் ஷர்மாவின் பந்துவீச்சில் ராயுடு அடித்த சிக்ஸரை கைஃப் குறிப்பாக எடுத்துரைத்தார். ராயுடு அழுத்தத்தில் பேக்ஃபுட்டில் காத்திருந்தார், மெதுவான பந்து வீச்சை எதிர்பார்த்தார். மற்றும் லாங்-ஆஃப் தலைக்கு மேல் பந்தை சக்திவாய்ந்த சிக்ஸருக்கு அடித்தார்.

கைஃபின் வார்த்தைகளில், “அம்பதி ராயுடுவின் தாக்கமான ஆட்டத்தை மாற்றியமைக்கும் தருணம். ஆட்டத்தின் சூழலில் அவரது இன்னிங்ஸ் மகத்தான முக்கியத்துவத்தை கொண்டிருந்தது. அவர் பேக்ஃபூட்டில் அடித்த சிக்ஸர் எனக்கு போட்டியின் தனித்துவமான ஷாட். கடந்த ஆண்டு மெல்போர்னில் நடந்த டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக விராட் கோலி மறக்க முடியாத சிக்சர்களை விளாசினார். ராயுடு அடித்த சிக்சர்கள் எனக்கு கோலி அடித்தது போன்று இருந்தது. ஆனால் அவரது ஐபிஎல் வாழ்க்கையை இவ்வளவு உயர்வாக முடித்ததற்காக அவருக்கு முழுப் புகழும் உண்டு.
” ஐபிஎல் 2023 இறுதிப் போட்டி தனது ஐபிஎல் வாழ்க்கையின் முடிவைக் குறிக்கும் என்று ராயுடு முன்னதாக அறிவித்திருந்தார். அவர் போட்டியில் முக்கிய பங்கு வகித்தார் மற்றும் சென்னை அணியின் ஐந்தாவது பட்டத்தை வென்ற பிறகு உணர்ச்சி வசப்பட்டார். அம்பதி ராய்டு இன்டர்நேஷனல் கிரிக்கெட்டில் இருந்து 2019 ஆம் ஆண்டு தனது ஒய்வை அறிவித்தார். அதன் பிறகு ஐபிஎல் போட்டிகளில் மட்டும் தனது திறைமையை நிருபித்து வந்தார். ஆனால் இப்போது அவர் ஐபிஎல் தொடரிலும் தனது ஒய்வை அறிவித்தார்.

இவர் இதற்க்கு முன்னரும் ஒய்வு பெறுவதாக ட்வீட் செய்து விட்டு பிறகு அதை நீக்கினார். அதனாலேயே தற்போது NO YOU TURN என்றும் கூறிப்பிட்டு ஒய்வை அறிவித்தார். அவர் குஜராத் அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் கோப்பையை வென்றதன் மூலம் இவர் ஐபிஎல் வரலாற்றில் ரோஹித் ஷர்மாவின் சாதனையை சமன் செய்துள்ளார்.அம்பதி ராய்டு ஆரம்ப கட்ட ஐபிஎல்லில் மும்பை அணிக்காக தனது திறைமையை காட்டி வந்தார். அதாவது 2010 முதல் 2017 வரை மும்பை அணிக்காக விளையாடி வந்தார்.

அதன் பின் 2017 முதல் 2023 வரை சென்னை அணிக்காக விளையாடியுள்ளார். இது வரை இவர் இவ்விரு அணிகளையும் சேர்த்து 8முறை ஐபிஎல் இறுதிப்போட்டியில் விளையாடி உள்ளார். அதில் மும்பை அணிக்காக 3 கோப்பையையும் சென்னை அணிக்காக முன்று கோப்பையையும் வாங்கியுள்ளார். இதற்க்கு மூன் ரோஹித் ஷர்மா மட்டுமே 6 ஐபிஎல் கோப்பையை வாங்கி இருந்தார். இந்த போட்டியின் மூலம் அதனை சமண் செய்தார் அம்பதி ராய்டு.





