ஐபிஎல் போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே நேற்று மிகவும் அற்புதமான போட்டி நடைபெற்றது. ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான் சிங் ஸ்டேடியத்தில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 118 ரன்களில் குஜராத் அணியின் பந்துவீச்சை சமளிக்க முடியாமல் விக்கெட்டை இழந்தது.

குஜராத் டைடன்ஸ் அணி 13.5 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 119 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த போட்டியில் வெற்றி பெற்ற ஹர்திக் பாண்டியா, தனது சிறந்த கேப்டன்சிக்கு மீண்டும் ஒரு எடுத்துக்காட்டாக திகழ்கிறார். போட்டிக்கு பின் பேசிய அவர், கேப்டன்ஷிப் பெருமையை ரஷீத் கானுக்கு வழங்கினார். அதேசமயம், ஐபிஎல்லின் சிறந்த விக்கெட் கீப்பர் என்று விருத்திமான் சஹாவை வர்ணித்து பேசினார்.
“ரஷீத்தை நூர் உடன் வர்ணித்து பேசி வந்தார் ஹர்திக் பாண்டியா. இதைவிடச் சிறந்தவர் யாரும் இல்லை, என்றும் நான் அதிகம் செய்ய வேண்டியதில்லை, எப்போது என்ன செய்ய வேண்டும் என்று பரிந்துரைத்து வந்தேன்.அவர்கள் என்ன செய்ய விரும்புகிறார்கள் என்பதில் மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறார்கள்.”

வீரர்களுடனான உரையாடல் சூழல் குறித்து பேசிய ஹர்திக், “விஷயங்கள் சரியாக நடக்காதபோது மட்டுமே நாங்கள் பேசுகிறோம். ரித்தி சிறந்த விக்கெட் கீப்பர்களில் ஒருவர் என்று நான் நினைக்கிறேன், ரஷீத் மற்றும் நூர் ஆகியோரை அவர்களின் வேகத்தில் தேர்ந்தெடுப்பது எளிதல்ல. நாங்கள் ரிலாக்சாக இருக்கிறோம், எங்கள் வேலையைச் செய்கிறோம். விருத்திமான் சஹாவை சிறந்த விக்கெட் கீப்பர் என்று வர்ணித்த குஜராத் கேப்டன் ஹர்திக் பாண்டியா, தோனி ரசிகர்களை காயப்படுத்தியுள்ளார்.

“கடந்த ஆட்டத்தில் நான் சில முடிவுகளை எடுக்கும் தவறுகளைச் செய்தேன், ஆனால் சுப்மன் அவுட் ஆவதற்குள், எனது வேலை பாதி முடிந்துவிட்டது. தவறுகளை ஒப்புக்கொள்வதில் எனக்கு தயக்கம் இல்லை. வெற்றிக்குப் பிறகு, ஹர்திக் பாண்டியா தனது தவறை ஒப்புக்கொண்டார், விருத்திமான் சஹா அவரைப் பாராட்டினார்.





