ஐபிஎல் 2023 ல் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. பெரிதும் எதிர்பார்க்கபட்ட இப்போட்டியானது மழையின் காரணமாக தேதி மாற்றம் செய்யப்பட்டு போட்டி நடந்து வந்தன. சென்னை அணி இந்த போட்டியில் வென்றால் 5 வது முறை கோப்பையை கைப்பற்றும். டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி பௌலிங்கை தேர்வு செய்தார். இப்போட்டியில் சென்னை அணி கடைசி வரை போராடி கோப்பையை கைப்பற்றியது.போட்டி மற்றும் ஜடேஜா பற்றி அணியின் பயிற்சியாளர் பிளமிங் சிலவற்றை கூறினார்.

முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 4 விக்கெட்டுகளை இழந்த நிலையில் 214 ரன்களை குவித்தது. ஐபிஎல் வரலாற்றில் இறுதிப்போட்டியில் அடித்த அதிகபட்ச ஸ்கோர் இதுவே ஆகும். குஜராத் அணியின் அதிக பட்சமாக தமிழகத்தை சேர்ந்த சாய் சுதர்ஷன் 47 பந்துகளில் 96 ரன்களை குவித்து ஆட்டமிழந்து வெளியேறினார். அதற்க்கு பிறகு அதிக பட்சமாக சாஹா 54 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். ஷுப்மன் கில் 39 ரன்களிலும் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா 21 ரன்களை குவித்தனர்.
215 என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய சென்னை அணிக்கு ஆரம்பமே மழை குறுக்கீட்டு போட்டி நிருத்தி வைக்கப்பட்டது. மழையின் காரணமாக நிருத்தி வைக்கப்பட்ட போட்டியானது 12.10 மணிக்கு மீண்டும் தொடங்கியது. 26 ரன்கள் இருந்த நிலையில் ருதுராஜ் விக்கெட்டை இழந்து வெளியேறினார். அதே ஓவரில் 47 ரன்களில் கான்வே ஆட்டமிழந்து வெளியேறினார். அதன் பின் அதிரடியாக விளையாடி வந்த ரஹானே 27 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற சென்னை அணியின் ரசிகர்கள் ஏமாற்றத்தை அளித்தார்.

தன்னுடைய கடைசி போட்டியில் அதிரடியாக விளையாடி வந்த ராய்டு 19 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அதன் பின் வந்த தோனி முதல் பந்திலேயே அவுட்டாகி வெளியேற மைதானம் முழுவதும் அமைதியானது. அதன் பின் ஜடேஜாவின் அதிரடியால் இறுதி ஓவர் இறுதி பந்து வரை சென்று சென்னை அணி வெற்றி பெற்றது. அதன் மூலம் 5 வது மூறை கோப்பையை கைப்பற்றி மும்பை அணியின் சாதனையை சமன் செய்தது.
கடைசி ஓவரில் மோஹித் ஷர்மாவுக்கு எதிராக மெதுவான பந்தில் யார்க்கரில் சிக்ஸர் அடித்து சென்னை அணியை மீண்டும் ஆட்டத்திற்குள் கொண்டு வந்ததற்கு ஜடேஜாவிற்கு பிளெமிங் பாராட்டு தெரிவித்தார். “எம்.எஸ்தோனி ஜடேஜாவை அங்கு கொண்டு வருவதில் மிகவும் ஆதரவாகவும் சுறுசுறுப்பாகவும் இருந்தார், இன்று அவர் அந்த நம்பிக்கையை திருப்பிக் கொடுத்தார். சிக்ஸர், குறிப்பாக, சரியான பந்திற்கு மிக நெருக்கமாக இருந்தது, வரையறுக்கப்பட்டது. ஆமாம் , சில நேரங்களில் அணியில் சில விரக்திகள் உள்ளன , ஆனால் அவர் ஒரு துப்பாக்கி வீரர். நம்பர் 1 வீரரான அவர் இன்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்” என்றார்.

கடைசி இரண்டு பந்துகளில் சென்னை வெற்றிக்கு 10 ரன்கள் தேவைப்பட்டதால் ஜடேஜா கடைசி ஓவரில் பெரும் அழுத்தத்தில் இருந்தார். அந்த ஓவரின் முதல் நான்கு பந்துகளில் அற்புதமான யார்க்கர்களை வீசிய மோகித் ஷர்மா 3 ரன்கள் மட்டுமே கொடுத்தார். 34 வயதான அவர் இறுதிப் பந்தில் முதலில் ஒரு சிக்ஸரை விளாசினார், பின்னர் பந்தை ஃபைன் லெக் நோக்கி பவுண்டரிக்கு வழிநடத்தி திரில் வெற்றியைப் பதிவு செய்தார். பந்து வீச்சில் அவர் நான்கு ஓவர்களில் 1/38 எடுத்தார்.




