ஐபிஎல் 2023 லீக்கில் 56 போட்டியில், கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று மிகவும் அற்புதமான போட்டி நடைபெற்றது. ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான இந்த போட்டியில், டாஸ் வென்ற ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பந்துவீச முடிவு செய்தார். முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெங்கடேஷ் ஐயரின் அபார ஆட்டத்தால் 149 ரன்கள் குவித்தது.

150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு சிறப்பான தொடக்கம் கிடைத்தது. ஜெய்ஸ்வால் முதல் ஓவரில் 26 ரன்கள் எடுத்தார். யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் ஜோடி 13.1 ஓவர்களில் இலக்கை எட்டியது. இந்த வெற்றியை பற்றி பேசிய சஞ்சு சாம்சன் யுஸ்வேந்திர சாஹல் தான் காரணம் என ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் புகழாரம் சூட்டியுள்ளார்.
இந்த போட்டியில் யுஸ்வேந்திர சாஹல் அபாரமாக பந்துவீசி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். சாஹலைப் பாராட்டிய சஞ்சு சாம்சன், “அவருக்கு ஒரு லெஜண்ட் என்ற பட்டத்தை வழங்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று நான் நினைக்கிறேன். நீங்கள் ஒருபோதும் அவருடன் பேச வேண்டியதில்லை, ஏனென்றால் அவருக்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரியும். அவர் டெத் ஓவர்களிலும் சிறப்பாக பந்து வீசுகிறார், இது ஒரு கேப்டனாக எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.”

இப்போட்டியை பற்றி சஞ்சு சாம்சன் கூறுகையில், “ஐபிஎல்லில் ப்ளே ஆப்பில் இருந்து ஒருபோதும் வெளியேறக்கூடாது என்ற அழுத்தத்தில் இருந்து வருகிறோம், நாங்கள் இன்னும் இரண்டு காலிறுதிகளில் விளையாட வேண்டும். ஒவ்வொரு ஆட்டமும், ஒவ்வொரு ஓவரும் முக்கியம். ஜோஸ் பட்லர் போன்ற ஜாம்பவான் ஜெய்ஸ்வாலுக்காக தனது விக்கெட்டை வீசும்போது சூழல் எப்படி இருக்கும் என்பதை நீங்கள் புரிந்து கொள்ளலாம். இன்று நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன், ஆனால் இன்னும் சில போட்டிகளில் கட்டாய வெற்றி பெற வேண்டிய நிலையில் உள்ளன.”





