2023 ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய முதல் அணி என்ற பெருமையை சென்னை சூப்பர் கிங்ஸ் பெற்றது. அதே சமயம், இரண்டாவது அணி எதுவென்ற போராட்டம் இன்னும் நடந்து வருகிறது. இந்த சீசனின் இரண்டாவது இறுதிப் போட்டியாளராக மாற, இன்று இரண்டாவது தகுதிச் சுற்று ஆட்டம் மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் இடையே நடைபெறுகிறது. இருவருக்கும் இடையேயான இந்த போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது. இந்தப் போட்டி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.

சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான குவாலிபையர்-1 ஆட்டத்தில் குஜராத் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது, அதே சமயம் மும்பை இந்தியன்ஸ் அணி தனது முந்தைய எலிமினேட்டர் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸை 81 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து இன்று குஜராத் அணியுடன் மோதுள்ளது.மும்பை இந்தியன்ஸ் அணி மற்றும் குஜராத் டைம்ஸ் இடையே இதுவரை மூன்று போட்டிகளில் மோதியுள்ளது , இதில் மும்பை 2 போட்டிகளில் வெற்றியும், குஜராத் ஒரு போட்டியில் வெற்றியும் பெற்றுள்ளன.
இந்த புள்ளிவிவரங்களைப் பார்க்கும்போது, மும்பை இந்தியன்ஸ் இன்று மீண்டும் ஒருமுறை வெல்லலாம் என்றும் கூறப்படுகிறது.இந்த சீசனில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதும் மூன்றாவது போட்டி இதுவாகும். இதற்கு முன், இரு அணிகளும் லீக் சுற்றில் இரண்டு முறை நேருக்கு நேர் மோதியுள்ளன, இதில் ஒரு முறை மும்பை மற்றும் ஒரு முறை குஜராத் அணியும் வென்றுள்ளன. இப்படிப்பட்ட சூழ்நிலையில் இரு அணியினரின் சமநிலையும் ஒரே மாதிரியாக உள்ளது.

குஜராத் மற்றும் மும்பை அணிகள் மோதும் இரண்டாவது தகுதிச் சுற்று ஆட்டம் குஜராத்தின் சொந்த மைதானமான அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. அத்தகைய சூழ்நிலையில், குஜராத் டைட்டன்ஸ் இங்குள்ள சொந்த மைதானம் என்ற சாதகத்தைப் பெறலாம், ஏனெனில் இந்த மைதானத்தில் இதற்கு முன்பு இருவருக்கும் இடையேயான மோதலில் குஜராத் அணி 55 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இருவரும் விளையாடிய மூன்று போட்டிகளில் இரண்டு மும்பையின் வெவ்வேறு மைதானங்களில் நடந்துள்ளது, அதில் மும்பை வெற்றி பெற்றது. அதேசமயம், அகமதாபாத்தில் நடந்த ஒரேயொரு போட்டியில் குஜராத் அணி வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் தான் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்கட்சியில் ஒரு போஸ்டர் வெளியிட்டது. அந்த போஸ்டர் பற்றி தான் இன்று கிரிக்கெட் வட்டாரம் பேசி வருகிறது. அதில் இறுதிப் போட்டிக்கு ஒரு அணி தகுதி பெற்றது மற்றொரு அணி எது என்ற கேள்வியுடன் ஒரு புகைப்படத்தை வெளியிட்டது.

அதில் ஒரு புறம் வெற்றி பெற்ற சென்னை அணியின் கேப்டனும் மற்றொரு புறம் ரோஹித் ஷர்மாவின் உருவ அமைப்பை வைத்து போஸ்டர் வெளியிட்டது. அது ஒரு கனிப்பாக தான் இருக்கும் என்றும் சிலர் கூற மற்றொரு பக்கம் இது அனைத்தும் ஸ்க்ரிப்ட் என்றும் சிலர் கூறி வருகின்றனர்.





