இந்தியன் பிரீமியர் லீக்கில் லீக்கின் 38வது ஆட்டத்தில் இன்று பஞ்சாப் கிங்ஸ் அணியும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் மோத உள்ளது. இப்போட்டியானது மொஹாலியில் உள்ள பஞ்சாப் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இவ்விரு அணிகளும் ஏற்கனவே இந்த வருடம் ஐபிஎல்லில் மோதின, அப்போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றது. லக்னோ அணி இது வரை 7 போட்டிகளில் 4 போட்டிகளை மட்டுமே வென்றுள்ளது. அதே போல் தான் பஞ்சாப் அணி 7 போட்டிகளில் 4 போட்டிகளை வென்றுள்ளது. முதலில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பௌலிங்கை தேர்வு செய்தது.

அதன் படி முதலில் களமேரங்கிய லக்னோ அணி ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடி ரன்களை குவிக்க ஆரம்பித்தனர். கே.எல். ராகுல் 12 ரன்களில் வெளியேறினார், இருப்பினும் மற்றொரு பக்கம் மேயர்ஸ் அதிரடி பாணியை விடாமல் விளையாடி அரை சதத்தை பூர்த்தி செய்ய, 54 ரன்களில் ஆட்டமிழந்தார். பதோனி மற்றும் ஸ்டானிஸ் ஜோடி சேர்ந்து பஞ்சாப் அணியின் பௌலிங்கை சிதறடித்து வந்தனர். 9 வது ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 111 குவித்து இருந்தனர். பதோனி 24 பந்துகளில் 43 ரன்களை குவித்த நிலையில் விக்கெட்டை பறிகொடுத்து வெளியேற,
அதன் பின் பூரான் தனது பங்கிற்கு பஞ்சாப் அணியை சிதறடித்தார்.15.5 ஓவர்களிலே 200 ரன்களை குவித்து அதிரடி ஆட்டத்தை காட்டி வந்தனர். பஞ்சாப் அணியின் கேப்டன் ஷிகர் தவானுக்கு என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வந்தார். பஞ்சாப் அணியின் பௌலர்கள் என்ன செய்யதென்று தெரியாமல் திணறி வந்தனர். ஸ்டானிஸ் 72 ரன்களை குவித்து வெளியேற, அதன் பின் பூரான் 45 ரன்களை குவித்த நிலையில் வெளியேறினார், இறுதியில் 20 ஓவர்களில் 257 ரன்களை குவித்து வந்தது லக்னோ அணி.

258 என்ற இமாலய இலக்குடன் களம் கண்ட பஞ்சாப் அணிக்கு ஆரம்பமே சோதனையாக அணியின் கேப்டன் முதல் ஓவரிலே விக்கெட்டை இழந்து வெளியேறி அணிக்கு ஏமாற்றத்தையே அளித்த நிலையில், பிரப்சிம்ரன் 9 ரன்களில் வெளியேற, அதன் பின் அதிரடியாக விளையாடி வந்த சிக்கந்தர் ராசா 36 ரன்களில் வெளியேறினார். பஞ்சாப் அணி இந்நிலையில் இருந்தே ஸ்கோரை உயர்த்த திணறி வந்தனர். மற்றொரு புறம் நிதானமாக விளையாடிய அதர்வா 66 ரன்களை அடித்த நிலையில் விக்கெட்டை இழந்த வெளியேற பஞ்சாப் அணி தோல்வியை நோக்கி நகர்ந்து சென்றது.அதன் பின் வந்த லிவிங்க்ஸ்டனும் ஜொலிக்க முடியாமல் வெளியேறினார்.

இந்நிலையில் இருந்து பஞ்சாப் அணியின் தோல்வி கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது என்றே சொல்லலாம். பஞ்சாப் அணி பௌலிங்கில் சொதபியதால், பேட்டிங் சிறப்பாக விளையாடியும் பஞ்சாப் அணியால் அந்த இலக்கை எட்ட முடியவில்லை. பஞ்சாப் அணியின் வீரர்கள் அடுத்தடுத்து வந்த வேகத்திலே சென்றனர். இறுதியில் 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த நிலையில் 201 ரன்களை மட்டுமே அடித்தது. லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி 56 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.





