ஐபிஎல் 2023 லீக் தொடரின் 57 வது போட்டியை குஜராத் டைடன்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும், மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மோத உள்ளது. இந்த சீசன் ஆரம்பம் முதலே குஜராத் அணி பலம் வாய்ந்ததாகவே இருந்து வருகிறது. புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் குஜராத் அணியும், மும்பை அணி 4 இடத்திலும் இருந்து வருகிறது. இந்த போட்டியில் குஜராத் அணி வென்றால் இந்த சீசனில் முதல் அணியாக ப்ளே ஆப் க்கு தகுதி பெரும். ஆனால் மும்பை அணி இனி வரவிருக்கும் அனைத்து போட்டிகளிலும் கட்டாயம் வென்று முடிக்க வேண்டும்.

குஜராத் அணி
குஜராத் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா இருந்து வருகிறார். இந்த அணி தான் கடந்த வருட ஐபிஎல்லில் கோப்பையை கைப்பற்றியது. அதே போல் இந்த வருடமும் கைப்பற்ற மும்முரத்தில் இருந்து வருகிறது. குஜராத் அணியை பொறுத்தவரை பேட்டிங் மற்றும் பௌலிங் அற்புதமாக இருந்து வருகிறது. சாஹா மற்றும் கில் அணிக்கு அதிரடியான ஆட்டத்தை தருகின்றனர். மிடில் ஆர்டர் பேட்டிங் பொறுத்தவரையும் பெரிதாக கூறை கூறும் வகையில் இல்லை.

அணியின் கேப்டன் ஹர்திக் பண்டியாவும் சிறப்பான ஆட்டத்தை வெளி படுத்தி வருகிறார்.பௌலிங்கை பற்றி பார்க்க போனால் ரஷித் கான் மற்றும் முகமது ஷாமி எதிர் அணியின் பேட்ஸ்மேன்களை திணறடித்து வருகின்றனர். இந்த ஐபிஎல்லில் அதிக விக்கெட் வீழ்த்திய பட்டியலில் ஷாமி மற்றும் ரஷித் கான் ஆகிய இருவரும் முறையே இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தில் இருந்து வருகின்றனர்.
மும்பை அணி
மும்பை அணிக்கு இந்த வருடம் முதல் பாதியில் மோசமாகவே விளையாடி வந்தன. பேட்ஸ்மேன்கள் ரன்களை குவிக்க திணறியே வந்தனர். பௌலிங் சற்று சுமாராகவே தான் இருந்து வந்தது. அணியின் கேப்டன் தொடர் சொதப்பலில் இருந்து வருகிறார். அவர் இந்த போட்டியில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். மும்பை அணி அடுத்த பாதியில் அற்புதமாக விளையாடி புள்ளி பட்டியலில் 3 இடத்திற்கு முன்னேறினார்கள். கடந்த போட்டியில் சூர்ய குமார் யாதவ் மற்றும் இஷான் கிஷன் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி அணியை வெற்றி பெற வைத்தார்கள்.

வெற்றி கணிப்பு
இன்று நடக்கவிருக்கும் போட்டியில் இவ்விரு அணிகளும் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருந்து வந்தாலும், கடந்த போட்டியில் மும்பை அணியின் பேட்ஸ்மேன்கள் அற்புதமான பேட்டிங்கை வெளிப்படுத்தி வந்தனர். இப்போட்டியில் மும்பை அணி வெற்றி பெறவே அதிக வாய்ப்புள்ளது.





