ஐபிஎல் 2023 இன் 46வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் (இடையே மொஹாலியில் உள்ள இந்திரஜித் சிங் பிந்த்ரா ஸ்டேடியத்தில் நடைபெற்றது, இதில் பஞ்சாப் 6 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணியிடம் தோல்வியை தழுவியது. இந்த மோசமான தோல்வியால் கேப்டன் ஷிகர் தவான் மிகவும் ஏமாற்றம் அடைந்தார். தோல்வியை குறித்து அவர் பேசுகையில், இந்த போட்டியில் மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா டாஸ் வென்று முதலில் பந்துவீச முடிவு செய்தார்.

முதலில் பேட் செய்த பஞ்சாப் அணி 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 214 ரன்கள் எடுத்தது. அதன் பின் களமிறங்கிய மும்பை அணி 18.5 ஓவர்களில் 216 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. பஞ்சாப் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தபோது கேப்டன் ஷிகர் தவான் மிகவும் ஏமாற்றம் அடைந்தார். ஸ்கோர் நன்றாக இருந்தது ஆனால் வெற்றி பெற முடியவில்லை என்று கூறினார்.
“நாங்கள் நன்றாக ஆட்டத்தை தொடங்கினோம், அது ஒரு நல்ல டார்கெட் ஆக இருக்கும் என்று நினைத்தோம், ஆனால் துரதிர்ஷ்டவசமாக அதை எங்களால் அந்த ரன்களை பாதுகாக்க முடியவில்லை. ரிஷி ஆரம்பத்தில் நன்றாகவே பந்து வீசினார், ஆனால் மறுமுனையில் இருந்து வெளியே நாங்கள் சற்று அதிகமாகவே ரன்களை கொடுத்துவிட்டோம், நாங்கள் இன்னும் இந்த போட்டியை கடுமையாக்கி இருந்திருக்க வேண்டும்.” மேலும் கூறுகையில்.

“இது ஒரு நல்ல விக்கெட் மைதானம் மற்றும் வேக மாற்றம் கைக்கு வரும், நான் நினைத்திருந்தேன், நாதன் எல்லிஸ் நன்றாக பந்து வீசினார், மற்ற பந்து வீச்சாளர்கள் இன்று சிறப்பாக பந்து வீசவில்லை. சுழற்பந்து வீச்சாளர்களை மீண்டும் கொண்டு வர நினைத்தேன், ஆனால் நேற்று பனி அதிகமாக இருந்தது, பேட்ஸ்மேன்களைக் கட்டுப்படுத்துவது கடினம் என்று நினைத்தேன். நான் எனது முக்கிய பந்துவீச்சாளர்களை ஆதரித்தேன், அவர்கள் சிறப்பாக செயல்படுவார்கள் என்று எதிர்பார்த்தேன், ஆனால் அவர்களும் அதை செய்யவில்லை.”என்று அவருடைய வருத்தத்தை வெளிப்படுத்தி இருந்தார் பஞ்சாப் அணியின் கேப்டன் ஷிகர் தவான்.





