
ஐபிஎல் 2023 க்கான 26லீக் போட்டிகளில் அட்டவணையில் முதல் மற்றும் இரண்டாம் இடத்தில் உள்ள அணிகளான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ஜெய்பூரில் உள்ள சாவை மான்சிங் மைதானத்தில் எதிர்கொண்டன. அதில் முதலில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பௌலிங்கை தேர்வு செய்தார். அதுவே அவருக்கு பாதகமாக அமைந்தது.

லக்னோ அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் கே.எல்.ராகுலும் மேயர்ஸும் பேட்டிங்கில் களமிறங்கினர். லக்னோ அணியின் தொடக்க ஆட்டக்காரர்களுக்கு ஆரம்பம் முதலே ரன்களை அடிக்க கஷ்டப்பட்டு வந்தனர். அதற்க்கு ஏற்றார் போல் ராஜஸ்தான் அணியும் கைக்கு வரும் கேட்ச்களை விட்டு வண்ணமே இருந்தன. அதன் பிறகு ரன்களை அடிக்க வேகம் எடுத்தனர், வேகம் எடுத்த நிலையிலே கே.எல்.ராகுல் 39 ரன்களிலே விக்கெட்டை இழந்து வெளியேறினார்.
அதன் பிறகு வந்த பதோனி மற்றும் ஹூடா சொற்ப ரன்களிலே வெளியேறி அணிக்கு ஏமாற்றத்தையே அளித்தனர். நன்றாக விளையாடி கொண்டு இருந்த மேயர்ஸ் 51 ரன்களை எடுத்துருந்த போது அஷ்வினிடம் விக்jகெட்டை இழந்தார். கடைசி ஓவரில் ஸ்டானிஸ் 21 ரன்களை அடித்திருந்த நிலையில் சந்தீப் சர்மாவிடம் விக்கெட்டை பறிகொடுத்தார். சஞ்சு சாம்சன் அடித்த ரன் அவுட்டால் பூரான் விக்கெட்டை இழந்து வெளியேறினார். அதன் பின் 7 விக்கெட்டுகளை இழந்த நிலையில் 154 மட்டுமே அடித்தனர்.
155 ரன்களை எடுத்தல் வெற்றி என்று களமேரங்கிய ஜெய்ஸ்வால் மற்றும் பட்லர் ஆரம்பம் முதலே அதிரடியை காட்டினர்கள். லக்னோ அணியின் பௌலர்களல் தொடக்க ஆட்டகரர்களின் விக்கெட்டை எடுக்க முடியாமல் மிகவும் கஷ்டப்பட்டு வந்தனர். நீண்ட நேரமாக விக்கெட் எடுக்கும் முயற்சியில் முதல் விக்கெட்டாக ஜெய்ஸ்வாலை ரன்களில் அவரது விக்கெட்டை விழ்த்தினர்.ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனும் 2 ரன்களிலே அவுட்டாகி வெளியேற ராஜஸ்தான் அணிக்கு மேலும் ஒரு பின்னடைவை சந்திதது.

பட்லரும் 40 ரன்களில் விக்கெட்டை இழந்த நிலையியல் ராஜஸ்தான் அணி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அதன் பின் வந்த எந்த வீராராலும் நிலைத்து நிற்க முடியாமல் திணறி வந்தனர் ராஜஸ்தான் அணியின் பேட்ஸ்மேன்கள். அணியின் ஒரே நம்பிக்கையாக இருந்த படிக்கல் லக்னோ அணியை தடுமாற வைத்தார். கடைசி ஓவர் வரை சென்ற போட்டியில் கடைசி ஓவரில் படிக்கல் விக்கெட்டை இழந்து அணிக்கு இருந்த ஒட்டு மொத்த நம்பிக்கையும் காணமல் போனது. ராஜஸ்தான் அணி இறுதியில் 144 ரன்களை மட்டுமே எடுத்து 10 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணியிடம் தோல்வியை தழுவியது.





