இந்தியன் பிரீமியர் லீக்கில் லீக்கின் 37வது ஆட்டத்தில் இன்று சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோத உள்ளது. இப்போட்டியானது சாவை மான்சிங் மைதானத்தில் நடைபெற்ற உள்ளது. இவ்விரு அணிகளும் ஏற்கனவே இந்த வருடம் ஐபிஎல்லில் மோதின, அப்போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றது. அந்த தோல்விக்கு பிறகு சென்னை அணி தோல்வியின்றி விளையாடி வருகிறது. புள்ளி பட்டியலில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் முதலிடத்திலும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 3 வது இடத்திலும் இருந்து வருகிறது.

சென்னை சூப்பர் கிங்க்ஸ்
சென்னை அணி இந்த வருடம் ஐபிஎல்லில் அருமையாகவே விளையாடி வருகிறது. சென்னை அணியின் கேப்டன் தோனிக்கு இது கடைசி வருடம் எனவும், அதனால் கோப்பையை கைப்பற்ற வேண்டும் எனுவும் ரசிகர்கள் எதிர் பார்த்து வருகின்றனர். சென்னை அணி 7 போட்டிகள் விளையாடி உள்ளது, அதில் 2 தோல்விகள் மட்டுமே பெற்று 5 போட்டிகளை வென்றுள்ளது. முதல் போட்டியில் குஜராத் அணியிடனும் அதன் பின் வந்த இரண்டு போட்டிகளிலும் வென்றது. அதன் பின் ராஜஸ்தான் அணியுடன் மட்டுமே தோல்வியடைந்து அதன் பின் வந்த அனைத்து போட்டிகளையும் வென்றது.

சென்னை அணியை பொறுத்த வரை பேட்டிங் வரிசை அற்புதமாக இருந்து எதிர் அணியின் பௌலிங்கை அதிரடியாகவே அடித்து விளையாடி வருகின்றன. சென்னை அணியின் பந்துவீச்சு சுமாராகவே இருந்து வந்தன. அதன் பிறகு தோனி கடுமையாக எச்சரித்ததால் இப்போது நன்றாகவே பௌலிங் செய்து வருகிறது.
ராஜஸ்தான் ராயல்ஸ்
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கடந்த வருடம் இறுதிப்போட்டிவரை சென்று குஜராத் அணியிடம் தோல்வியை தழுவியது.இது வரை 7 போட்டிகளை விளையாடிய நிலையில் 3 போட்டிகளில் தோல்வியை தழுவிய நிலையில், 4 போட்டிகளில் வெற்றியை பெற்றுள்ளது. கடைசி இரு போட்டிகளில் தொடர் தோல்வியில் இருந்து வருகிறது, அதில் இருந்து வெளிவர இப்போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் இருந்து வருகிறார். ராஜஸ்தான் அணிக்கு பேட்டிங்கில் நல்ல தொடக்கம் இருந்தாலும் மிடில் ஆர்டர் சுமாராகவே இருந்து வருகிறது. பௌலிங் பொறுத்த வரை அஷ்வின் மற்றும் சாஹால் அற்புதமாக வீசி எதி அணியின் பேட்ஸ்மேன்களை திணற வைத்து வருகிறார்கள்.

வெற்றி கணிப்பு
இவ்வறு அணிகளும் ஏற்கனவே மோதி அதில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்று இருந்தாலும், சென்னை அணி அதன் பின் வந்த அனைத்து போட்டிகளிலும் வெற்றியை தக்க வைத்து வருகிறது. ராஜஸ்தான் அணி வெற்றி பெற வேண்டிய போட்டிகளை இறுதி வரை எடுத்து சென்று தோல்வியை தழுவி வருகிறது. ஆகையால் இப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி வெற்றி பெற அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டு வருகிறது.





