ஐபிஎல் 2023 லீக்கில் 49 போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் சென்னையில் உள்ள எம்.எ.சிதம்பரம் மைதானத்தில் மோதின. சென்னை அணிக்கு கடந்த போட்டியில் லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் மழை குறுக்கிட்டதால் 1 புள்ளிகள் மட்டுமே கிடைத்தது. மற்றொரு புறம் மும்பை அணி பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பாக வெற்றி பெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பௌலிங்கை தேர்வு செய்தார்.

அதன்படி பேட்டிங் விளையாடிய மும்பை அணியின் தொடக்க வீரர்கள் கிரீன் மற்றும் இஷான் கிஷன் சிறப்பான ஆட்டதை கொடுக்க நினைத்தனர், ஆனால் 6 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அவர்க்கு பின்னரே இஷான் கிஷனும் 7 ரன்களில் வெளியேற, அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா ரன் ஏதும் எடுக்காமல் அவுட்டாகி வெளியேறினார். அதற்க்கு பிறகு சூர்ய குமார் யாதவ் மற்றும் வதேரா இணைந்து வலுவான கூட்டணி அமைத்து 55 ரன்களை குவித்து வந்த நிலையில் சூர்யகுமார் .26 ரன்களில் ஜடேஜாவின் சுழலில் வெளியேறினார்.
மற்றொரு பக்கம் நிதானமாக விளையாடி வந்த வதேரா ரன்களை குவித்து அணிக்கு நம்பிக்கையை சேர்த்தது மட்டுமல்லாமல் தனது அரை சதத்தை பூர்த்தி செய்தார். அதன் பின் பத்திரனா வீசிய பந்தலில் தனது விக்கெட்டை இழந்து வெளியேறினார். டிம் டேவிட் 2 ரன்களிலும், அர்ஷாத் கான் 1 ரன்களில் வெளியேறினார். சென்னை அணியின் பௌலிங்கை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து வந்தனர். ஸ்டப்ஸ் 20 ரன்களில் வெளியேற இறுதியில் மும்பை 8 விக்கெட்டுகளை இழந்து 139 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது.

140 ரன்களை எடுத்தால் வெற்றி என களம் கண்ட சென்னை அணியின் தொடக்க வீரர்கள் ருதுராஜ் மற்றும் கான்வே ஆரம்பம் முதலே அதிரடியை காட்ட தொடங்கினார்கள். அதன் பின் வந்த சாவ்லாவின் சுழலில் சிக்கி ருதுராஜ் 30 ரன்களில் வெளியேறினார். அதன் பின் வந்த ரஹானே அதிரடியாக விளையாடி வந்த நிலையில் அவரும் சாவ்லாவின் சுழலில் சிக்கி விக்கெட்டை இழந்து வெளியேறினார். நிதானமாக விளையாடி வந்த ராயுடு 12 ரன்களில் அவுட்டாகி வெளியேறினார்.

அதன் பின் வந்த டுபே தனது அதிரடி பாணியை தொடர்ந்து வந்தார். அவருடன் கூட்டணி இணைந்த கான்வே நிதானமாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தி வந்தனர். கான்வே 44 ரன்களில் தந்து விக்கெட்டை இழந்து வெளியேற, அதன் பின் களமிரங்கிய சென்னை அணியின் கேப்டன் தோனி இறுதி ரன்னை அடித்து அணியை வெற்றி பெற செய்தார். இறுதியில் சென்னை அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்தது. இந்த சீசனில் விளையாடிய இரண்டு போட்டிகளிலும் சென்னை அணியே வென்றுள்ளது.





