ஐபிஎல் 2023 க்கான 35 லீக் போட்டியில் அஹமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை குஜராத் டைடன்ஸ் அணி எதிர்கொண்டது. கடந்த போட்டியில் மும்பை அணி தோல்வியை தழுவி 7 வது இடத்தில் இருந்தும் குஜராத் அணி 4இடத்திலும் இருந்து வருகிறது, வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இவ்விரு அணிகளும் உள்ளன.டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா பௌலிங்கை தேர்வு செய்தார்.

அதன் படி முதலில் பேட்டிங் செய்ய வந்த குஜராத் அணியன் தொடக்க ஆட்டக்காரர்களாக கில் மற்றும் சாஹா களமேரங்கினார்கள். குஜராத் அணியின் தொடக்க ஆட்டக்காரர் சாஹா 4 ரன்களிலே அர்ஜுன் டெண்டுல்கரிடம் விக்கெட்டை இழந்தார். சாவ்லாவின் சுழல் பந்தில் மாற்றி விக்கெட்டை இழந்து வெளியேறினார் ஹர்திக் பாண்டியா. மறுபுறம் சிறப்பான பேட்டிங்கின் மூலம் தனது அரை சதத்தை பூர்த்தி செய்த நிலையில் கார்த்திகேயாவிடம் விக்கெட்டை பறிகொடுத்தார்.
விஜய் ஷங்கரும் தனது பங்கிற்கு அதிரடியை காட்டிய நிலையில் இவரும் சாவ்லாவின் சுழலிலே சிக்கினார். அபினவ் 21 பந்துகளில் 42 ரன்களை கடத்த நிலையில் விக்கெட்டை இழந்து வெளியேறினார். இதற்க்கு பின் வந்த திவாட்டியா முதல் பந்திலே இருந்து மும்பை அணியின் பௌலர்களை பந்தாடினார். டேவிட் மில்லரும் பந்துகளை பறக்க விட்டு அதிரடியை காட்டி வந்தனர். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்த நிலையில் 207 ரன்களை குவித்தது குஜராத் டைடன்ஸ் அணி. மும்பை அணி ஐபிஎல் வரலாற்றில் ஒரு முறை மட்டுமே 200+ ரன்களை சேஸ் செய்து வெற்றி பெற்றுள்ளது.

208 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி களம் கண்ட மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஆரம்பமே தடங்கலாக அணியின் கேப்டன் 2 ரன்களிலே வெளியேரினார். அந்த நிலையில் இருந்தே மும்பை அணி தடுமாற்றத்தையே சந்தித்தனர். இஷான் கிஷனும் 10 ரன்களில் வெளியேறினார். வரிசையாக திலக் வர்மாவும் வெளியேறினார். கிரீன், டிம் டேவிட் மற்றும் சூர்யகுமார் யாதவ் சொற்ப ரன்களில் வெளியேர மும்பை அணிக்கு இருந்த வெற்றி வாய்ப்பும் வெளியேறியது. சாவ்லா ஒரு சில பந்துகளை பறக்க விட்டு வந்தார்.

குஜராத் அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியமல திணறியே வந்தனர். மும்பை அணி வீரர்கள் ஆரம்பம் முதல் இருந்தே கஷ்ட்டப்பட்டே வந்தனர். மும்பை அணி 20 வது ஓவர்களில் 152 ரன்களை மட்டுமே அடிக்க முடிந்தது.இறுதியில் குஜராத் அணி 55 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.





