
சாய் சுதர்ஷன் இன்னும் 15 வருடங்களுக்கு இந்திய அணியில் அவரால் விளையாட முடியும் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான் கூறியுள்ளார். டி20 உலக கோப்பை போட்டிருக்க இந்திய அணி வீரர்களை இளம் வீரர்களை தயார் செய்து வருகிறது. அதற்கு முதற்கட்டமாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஐந்து தொடர்களை கொண்ட டி20 போட்டியில் இந்திய அணி 4-1 என்ற வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதன் பின்னர் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான மூன்று வடிவ கிரிக்கெட்டுகளையும் விளையாட உள்ளது அதில் முதல் கட்டமாக டி20 போட்டியானது 1 – 1 வித்தியாசத்தில் சமம் செய்தது.

தென் ஆப்பிரிக்கா அணியின் சார்பாக அதிகபட்சமாக ஆண்டிலே பஹ்லுகுவாயோ அவர் 33 ரன்களும் டோனி டி ஜோர்ஜி 28 ரன்களுக்கும் மார்க்கம் 12 ரன்களை மட்டுமே அடித்திருந்தனர். எனவே தென்னாப்பிரிக்கா அணி 50 ஓவர்க்கு தாக்குப் பிடிக்க முடியாமல் 27.3 ஓவர்களின் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 116 ரன்களை மட்டுமே அடித்திருந்தது. இது தான் தென்னாப்பிரிக்கா அணி தென்னாப்பிரிக்கா மைதானத்தில் குறைந்த பட்ச ஸ்கோர் இதுவே ஆகும்.
இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் அற்புதமாக பந்து வீசியிருந்தனர். அர்ஷ்தீப் சிங் ஒரு நாள் போட்டியில் நேற்று தான் முதல் விக்கெட்டை வீழ்த்தி இருந்தனர். இந்த போட்டியில் அவர் ஐந்து விக்கெட்களையும் ஆவேஷ் கான் நான்கு விக்கெட்டுகளையும் குல்தீப் யாதவ் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தி இருந்தனர். 117 ரன்கள் இலக்காகக் கொண்ட களமிறங்கிய இந்திய அந்த இலக்கை 16.4 ஓவரில் எளிதாக விட்டு வெற்றி பெற்றது.

இதிலிருந்து அணியின் அதிகபட்சமாக தமிழகத்தை சேர்ந்த அறிமுக வீரராக சாய் சுதர்ஷன் 55 ரன்கள் ஸ்ரேயாஸ் ஐயர் 52 ரன்களும் ருதுராஜ் கெய்க்வாட் 5 ரன்னையும் எடுத்திருந்தனர். எனவே இந்திய அணி 16.4 ஓவர்களில் இரண்டு விக்கெட் மட்டுமே இழந்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் எளிதாக வெற்றி பெற்று தொடரில் முன்னிலையில் இருக்கின்றது. இந்த முதல் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த சாய் சுதர்ஷன் 43 பந்துகளில் 55 ரன்களை அவர் அடித்து இருந்தார். அவருடைய பேட்டிங் குறித்து முன்னாள் இந்திய வீரர் இர்பான் பதான் கூறுகையில்,
தென்னாப்பிரிக்கா மைதானத்தில் ஒரு வீரர் இது போல் சிறப்பாக செயல்பட முடிகின்றது என்றால் அவரால் இன்னும் 10 – 15 வருடங்களுக்கு அவரால் இந்திய அணியால் விளையட முடியும்.ஒரே போட்டியில் எந்த ஒரு வீரரையும் பற்றியும் தெரிந்துகொள்ள முடியாது. ஆனால் சாய் சுதர்ஷன் முதல் பந்திலேயே அவர் பவுண்டரி அடித்து தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். ஷாட் பந்துகளை அவர் நன்றாக விளையாடுகிறார். கால்களை நகர்த்தி சிறப்பாக விளையாடுகிறார்.

அதேபோல் அவர் சுழற்பந்து மற்றும் வேகப்பந்தையும் சிறப்பாக எதிர்கொள்கிறார்.அவர் பேட்டிங் செய்யும் போது கால்களை முன்னாடி மற்றும் பின்னாடி நகர்த்தி சிறப்பாக விளையாடுகிறார். சுழற்பந்துகளை ஸ்வீப் ஷாட்களை சிறப்பாக அவர் அடிக்கின்றார். பந்து வீச்சாளர்கள் பந்து வீசும் போது சரியாக கணித்து முன்னாடி வந்து பந்தை நன்றாக எதிர்கொள்கிறார்.இதை எல்லாம் வைத்து பார்த்தல் அவர் கிரிக்கெட் விளையாட்டை நன்றாக புரிந்து வைத்துள்ளார் என்றும் இர்பான் பதான் கூறியிருந்தார்.





