உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர் பார்த்து காத்துகொண்டிருந்த ஐபிஎல் 2024 மார்ச் 22 முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதில் நேற்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் லக்னோவில் உள்ள எகனா மைதானத்தில் பல பரீட்சை செய்தது. இந்த இரண்டு அணிகளும் புள்ளி பட்டியலில் அடுத்த இடத்திற்கு செல்ல இந்த போட்டியில் கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என்ற அவசியம் இருந்து வந்தது.

லக்னோ அணி புள்ளி பட்டியலில் 6வது இடத்திலும் மும்பை அணி 9 இடத்திலும் இருந்ததது. நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் கே எல் ராகுல் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்து இருந்தார். அது அவர்களுக்கு சிறப்பாக கை கொடுத்தி இருந்தது. ஆரம்பத்தில் மும்பை அணியின் தொடக்க வீரர் ரோஹித் ஷர்மா சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா மற்றும் ஹர்திக் பாண்டியா அடுத்தடுத்து வெளியேறி மும்பை அணிக்கு ஏமாற்றத்தையே அளித்து இருந்தார்.
லக்னோ அணியின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 7 விக்கெட்டுகளை இழந்து 144 ரன்களை மட்டுமே அடித்து இருந்தது. அதன் பின் 145 ரன்களை இலக்காகக் கொண்டு களமிறங்கிய லக்னோ அணி ஆரம்பத்தில் சில விக்கெட்டுகளை இழந்து இருந்தாலும் அதன் பின் தங்களது சிறப்பான ஆட்டத்தால் லக்னோ அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்து இருந்தது.

இதன் மூலம் லக்னோ அணி புள்ளி பட்டியலில் 3 இடத்திற்கு முன்னேறியுள்ளது. இந்த போட்டியில் அதிகபட்சமாக ஸ்டாய்னிஸ் 62 ரன்களும் கே.எல் ராகுல் 28 ரன்களையும் அடித்து இருந்தனர். எனவே லக்னோ அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்து இருந்தது. இந்த தோல்வியின் மூலம் மும்பை அணி கிட்ட தட்ட ப்ளே ஆப் ரேசில் இருந்து வெளியேறிவிட்டது என்றும் சொல்லலாம்.

இது குறித்து இர்பான் பதான் கூறுகையில், கடந்த ஆண்டு தகுதி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணியில் ஜஸ்பிரித் பும்ரா இல்லை, ஆனால் இந்த சீசனில் அவரது சேவை இருந்தது. ஆனால் இன்னும் இந்த நிலையில்தான் இருக்கிறார்கள். ஏனெனில் மைதானத்தில் அவர்களது அணி சரியாக நிர்வகிக்கப்படவில்லை என்று நான் நினைக்கிறேன். கேப்டன் ஹர்திக் பாண்டியா களத்தில் பல தவறுகளை செய்தார் அது தான் உண்மை என்றார் இர்பான் பதான்.
ஆரம்ப விக்கெட்டுகளை இழப்பதில் இருந்து மீள்வது கடினம் என்று நினைக்கிறேன், அதைத்தான் இன்று நம்மால் செய்ய முடியவில்லை. நாங்கள் அந்த பந்துகளை தவறவிட்டு அவுட் ஆனோம், அதுதான் இதுவரை எங்களுக்கு கிடைத்த சீசன். நாங்கள் மீண்டு வருவோம் என்று நினைத்தேன். அதற்கு நீங்கள் எல்லாவற்றையும் கொடுக்க வேண்டும். இந்த விளையாட்டில் இருந்து கற்றுக்கொள்ள நிறைய விஷயங்கள் உள்ளன.”





