நேற்றிலிருந்து இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வரும் செய்தி என்றால் அது இஷான் கிஷன் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயரின் பெயர்கள் சம்பளம் மத்திய ஒப்பந்தத்தில் இருந்து நீக்கப்பட்டது தான் பிசிசிஐ நேற்று மத்திய ஒப்பந்தம் 2023 மற்றும் 2024 காண பெயர்களை வெளியிட்டது. அதில் சில முக்கிய வீரர்களின் பெயர்களை மத்திய ஒப்பந்தத்தில் இருந்து நிக்கியது தான். அதில் குறிப்பாக ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷன் பெயர்கள் தான் மிகவும் பேசப்பட்டு வந்தாலும் அதற்கு அடுத்தபடியாக சாஹல் புஜாரா ஷிகர் தவான் உமேஷ் யாதவ் ஆகியோரின் பெயர்களும் அந்த பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

இஷான் கிஷான் தென் ஆப்பிரிக்கா எதிரான டெஸ்ட் தொடரின் போது மன சோர்வு காரணமாக அணியிலிருந்து விலகினார். ஆனால் அதன் பின்னர் அவர் ரஞ்சி டிராபியில் மத்திய பிரதேச அணிக்காக விளையாடாமல் ஐபிஎல் 2024 பயிற்சிகளை மேற்கொண்டு வந்தார். இதற்கு பிசிசிஐ எப்போது ஒரு எச்சரிக்கை ஒன்றையும் அளித்து இருந்தது. ரஞ்சி ட்ரோபியில் விளையாட வேண்டும் என்றும் கூறியிருந்தது. இஷான் கிஷன் அதனை சற்றும் மதிக்காமல் அவ்வாறு தொடர் ஐபிஎல்காக பயிற்சி மேற்கொண்டு வந்திருந்தார்.

ஸ்ரேயாஸ் ஐயர் இங்கிலாந்து அணிக்கு டெஸ்ட் தொடரில் முதல் இரண்டு போட்டியில் சொதப்பலான பேட்டிங்கை அவர் வெளிப்படுத்தி இருந்தார். அதன் பின் காயம் என்று டெஸ்ட் போட்டியில் இருந்து விலகிய நிலையில் அவரும் ஐபிஎல் காக பயிற்சிகளை மேற்கொண்டும் ரஞ்சி ட்ரோபியில் விளையாட மூலம் இருந்து வந்தார் எனவே ஒப்பந்த பட்டியலில் இருந்து பிசிசிஐ இவர்களின் இரண்டு பெயர்களையும் நீக்கி உள்ளது
They are talented cricketers, both Shreyas and Ishan. Hoping they bounce back and come back stronger. If players like Hardik don’t want to play red ball cricket, should he and others like him participate in white-ball domestic cricket when they aren’t on national duty? If this…
— Irfan Pathan (@IrfanPathan) February 29, 2024
இது குறித்து முன்னாள் இந்திய வீரர் இர்பான் பதான் கூறுகையில், அவர்கள் திறமையான கிரிக்கெட் வீரர்கள், ஸ்ரேயாஸ் மற்றும் இஷான் இருவரும். அவர்கள் மீண்டும் வலுவாக திரும்பி வருவார்கள் என்று நம்புகிறேன். ஹர்திக் போன்ற வீரர்கள் சிவப்பு பந்து கிரிக்கெட் விளையாட விரும்பவில்லை என்றால், அவரும் அவரைப் போன்றவர்களும் தேசிய கடமையில் இல்லாதபோது வெள்ளை பந்து உள்நாட்டு கிரிக்கெட்டில் பங்கேற்க வேண்டுமா? இது அனைவருக்கும் பொருந்தவில்லை என்றால், இந்திய கிரிக்கெட் எதிர்பார்த்த முடிவுகளை அடையாது என்றும் அவர் கேள்வி எழுப்பி இருந்தார்.





