உலக கோப்பை 2023 தொடரானது தற்போது சுவாரசியமான கட்டத்தை எட்டிய நிலையில் அணிகள் பலவும் ஏற்கனவே 4 போட்டிகளை விளையாடிய நிலையில் அவர்களின் பலம் எனது பலவீனம் எனது என்பது குறித்து நன்றாக தெரிந்து வைத்திருக்கின்றனர். இந்நிலையில் நேற்று ஆஸ்திரேலியா vs நெதர்லாந்து அணிகளுக்கு இடையேயான போட்டியானது டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடத்து வருகிறது.

இந்த புள்ளி பட்டியல் நான்காவது இடத்தில் இருக்கும் ஆஸ்திரேலியா அணியும் ஏழாவது இடத்தில் இருக்கும் நெதர்லாந்து அணியும் மோதின. இதில் ஆஸ்திரேலிய அணி இதற்கு முன்னதாக பாகிஸ்தான் அணியிடம் 62 வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி பெற்று இந்த போட்டியில் களமிறங்குறது. ஆனால் மறுபக்கம் நெதர்லாந்து அணி இலங்கைக்கு எதிரான போட்டியில் ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவி இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்று கட்டாயத்தில் இருந்து வருகிறது.

ஆஸ்திரேலியா அணி இதுவரை விளையாடியுள்ள நான்கு போட்டிகளில் 2 போட்டிகளில் வெற்றி கண்டுள்ளது. நெதர்லாந்து அணியும் நான்கு போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இதில் டாஸ் என்று பேட்டிங்கை தேர்வு செய்தனர் ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் கம்மின்ஸ். அவர்கள் பேட்டிங் தேர்வு செய்தது போலவே அவர்களுக்கு நன்றாகவே ரன்களை குவித்தனர் 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 399 ரன்கள் குறித்து இருந்தனர்.அணியின் அதிகபட்சமாக மேக்ஸ் வேலை 106 ரன்களும் டேவிட் வார்னர் 104 ரன்களும் ஸ்மித் 71 ரன்களையும் குவித்திருந்தனர்.
இந்த போட்டியில் மேக்ஸ்வெல் ஒரு வரலாற்று சாதனை நிறைவேற்றி உள்ளார். அந்த வரலாற்று சாதனை என்னவென்றால் குறைந்த பந்துகளில் சதம் அடித்த வீரர் என்ற பெருமை அடைந்தார். அதாவது 40 பந்துகளில் அவர் தன்னுடைய சதத்தை பூர்த்தி செய்து இருந்தார் இதுவே 48 வருட உலகக்கோப்பை அதி வேக சதமாகும். அந்த போட்டியில் அவர் 9 பவுண்டரிகளை மற்றும் 8 சிக்சர்களை அடித்து இருந்தார்.

இருப்பினும் அவர் 106 ரன்கள் எடுத்த நிலையில் பிக் வீசிய பந்தில் விக்கெட்டை இழந்து வெளியேறினார். அதன் பின் மேக்ஸ்வெல் இந்த அதிவேக சதத்தை அவர் அவருடைய குழந்தைக்கு சமர்பிக்க உள்ளதாகவும் தெரிவித்து இருந்தார். அந்த போட்டியை காண்பதற்காக அவர் மகன் லோகன் மைதனத்தில் தந்தையின் போட்டியை கண்டுகளிதுள்ளார். மேலும் இந்த போட்டியில் நெதர்லாந்து அணி மாபெரும் தோல்வியை தழுவி இருந்தது.



