
உலக கோப்பை 2023 தொடரானது சமீபத்தில் இந்தியாவில் கோலாகலமாக நடந்து முடிந்தது. அதில் இந்திய அணி இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா அணியிடம் தோல்வியை தழுவியது. கடந்த பத்து ஆண்டுகளாக ஐசிசி கோப்பை ஒன்றை கூட இந்திய அணியால் வெல்ல முடிவயில்லை. அதில் இருந்து மீண்டு வர இந்திய முழு முயற்ச்சியில் ஈடுபட்டு உள்ளனர். இந்திய அணி அடுத்த வருடம் நடைபெற உள்ள உலகக்கோப்பை போட்டிக்கு தயாராகி வருகிறது.

அதற்க்கு முன்னேட்டமாக இந்திய அணி ஆஸ்திரேலியா அணியை எதிர்கொண்டு தற்போது விளையாடி வருகிறது. 5 தொடரில் 2 போட்டிகளில் வெற்றி பெற்றும் 1 போட்டியில் தோல்வியும் தழுவி உள்ளது. இருந்த போதிலும் அடுத்த வருடம் டி20 உலக கோப்பை போட்டியானது நடக்க இருப்பதினால் இந்தியா அதில் இந்தியா சாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு பல ஏற்பாடுகளையும் இந்திய அணி தீவிரமாக செய்து வருகிறது.
குறிப்பாக இளம் வீரர்களுக்கு வாய்ப்புகளை வழங்கி சோதனை செய்து வருகிறது. அதற்க்கு அடுத்த கட்டமாக இந்திய அணி தென்னாபிரிக்கா அணியிடம் அனைத்து வடிவ போட்டிகளிலும் விளையாட உள்ளது. அதற்க்கான இந்திய வீரர்களின் பட்டியலை BCCI நேற்று அறிவித்து இருந்தது. அதில் ஜெய்ஸ்வால், திலக் வர்மா, கெய்க்குவாட் போன்ற இளம் வீரக்ளுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தான் இதற்கு அடுத்து வரும் தென்னாபிரிக்க தொடருக்கான இந்திய அணி வீரர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது.

இருப்பினும் அதில் இந்திய அணியின் முன்னணி வீரர்களான ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலியை டி20 தொடரில் தேர்ந்து எடுக்கவில்லை. எனவே இந்திய அணி நடக்கவிருக்கும் T20 உலககோப்பையில் விராட் கோலியை சேர்க்க வேண்டாம் என்று BCCI முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதற்க்கான காரணம் கடந்த ஓராண்டாக டி20 போட்டியில் விளையாடாமல் உள்ளாதல் மீண்டும் அவரை இந்திய அணியில் அழைக்க வேண்டாம் என்றும் தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளது. அது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
2 டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி:
ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மான் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன் , கேஎல் ராகுல் (வி.கே), ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், முகமது சிராஜ், முகேஷ் குமார், முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா , பிரசித் கிருஷ்ணா.
3 டி20 போட்டிகளுக்கான இந்திய அணி:
யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுப்மான் கில், ருதுராஜ் கெய்க்வாட், திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ரிங்கு சிங், ஷ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா , வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ், முகேஷ் குமார், தீபக் சாஹர்.

3 ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணி:
ருதுராஜ் கெய்க்வாட், சாய் சுதர்சன், திலக் வர்மா, ரஜத் படிதார், ரின்கு சிங், ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் (கேப்டன்), சஞ்சு சாம்சன் ( விக்கெட் கீப்பர்), அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல். முகேஷ் குமார், அவேஷ் கான், அர்ஷ்தீப் சிங், தீபக் சாஹர்.





