உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துகொண்டு இருந்த ஐபிஎல் 2024 மார்ச் 22 முதல் தொடங்கி தற்போது வரை சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதில் நேற்று நடந்த 25 வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மோதியது. அதில் டாஸ் வென்ற ஹர்திக் பாண்டியா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன் படி பேட்டிங் செய்த பெங்களூரு அணி ஆரம்பத்தில் இருந்தே தடுமாறி தான் விளையாடி வந்தது. இருப்பினும் மிடில் ஆர்டரில் அவர்கள் சற்று தடுமாறி விளையாடவே ரன்கள் மெதுவாக அந்த இடத்தில் குறைந்தது. ஆனால் ஆதன் பின் தினேஷ் கார்த்திக் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். எனவே பெங்களூரு அணி 20வது ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 196 ரன்களை குவித்து இருந்தது.
பின்னர் வந்த மும்பை அணியின் தொடக்கம் முதலே பேட்டிங் சிறப்பாக இருந்தது. எனவே அவர்கள் 197 இலக்கை 15.3 ஓவர்களிலே அடித்து முடித்து விட்டனர். அதில் வந்த அனைவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தனர். இஷான் கிஷன் 34 பந்துகளில் 69 ரன்களும் ரோஹித் ஷர்மா 24 பந்துகளில் 38 ரன்களும் சூர்யகுமார் யாதவ் 19 பந்துகளில் 52 ரன்களும் ஹர்திக் பாண்ட்டியா 6 பந்துகளில் 21 ரன்களையும் திலக் வர்மா 10 பந்துகளில் 16 ரன்களையும் அடித்து இருந்தனர்.

இதனால் மும்பை அணி பெங்களூரு அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு மிக முக்கியமான காரணமாக இருந்தவர் பும்ரா என்றாலும் பேட்டிங்கில் சிறப்பாக ஆடி ரன்களை மல மல வென ஏற்றியவர் இஷான் கிஷான். இந்நிலையில் சூரியகுமார் யாதவுடனான பேட்டியில் ஹர்திக் மற்றும் சூரியகுமார் யாதவ் கொடுத்த அறிவுரை குறித்து பேசியுள்ளார்.
அவர் கூறியதாவது :ஹர்திக் பாண்டியா பாய் என்னிடம் சொன்னது என்னவென்றால் எப்போதுமே ஆறாவது கியரில் விளையாடுவ து அவசியமில்லை. நான் இந்திய அணியில் இருந்தபோது,. நான் சிங்கிள்ஸில் எடுப்பதில் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டும் என்று நீங்கள் என்னிடம் சொன்னீர்கள். நான் ஆல்ரவுண்ட் ஆட்டம் இருந்தால் எந்த கியரில் விளையாடுவேன் என்பதை பந்து வீச்சாளர்கள் கூட யூகித்துக்கொண்டே இருக்க வேண்டும். இவை நான் உழைத்த சிறிய விஷயங்கள் மற்றும் அதை போட்டியில் செயல்படுத்த முயற்சிக்கிறேன்.

ஒவ்வொரு கட்டத்திலும் நாம் விளையாடும்போது, நம்முடைய அடிப்படைகள், முக்கியமான விஷயங்களை மறந்துவிடுகிறோம். வேடிக்கைக்காக மட்டுமே நாங்கள் சில ஆட்டத்தில் விளையாடுகிறோம். ஆனால் நீங்கள் ஓய்வு எடுக்கும் போது நீங்கள் நிறைய விஷயங்களைப் புரிந்துகொள்வீர்கள். சிறிய விஷயங்கள் கூட சில நேரங்களில் முக்கியமானவை என்று பேசியிருந்தார் இஷான் கிஷான்.





