வரலாற்று சிறப்பு மிக்க ஆஷஸ் தொடரானது தற்போது மிகவும் பரவலாக பேசப்பட்டு வருகிறது. அதற்கு கரணம் ஆஷஸ் தொடரின் மூன்றாவது போட்டியில் இங்கிலாந்து அணியானது தங்களுடைய பாஸ் பால் முறைப்படி விளையாடி 592 ரன்கள் குவித்து. இதனால் ஆஸ்திரேலியா ரன்களை எடுக்க தடுமாறியது. ஆனால் வெற்றிபெற்றுவிடும் என்றிருந்த நேரத்தில் மழை காரணமாக போட்டியானது தடைபட்டு டிராவில் முடிந்தது.

ஆனால் இங்கிலாந்து அணி விளையாடிய முறை பெருமளவு டெஸ்ட் கிரிக்கெட்டில் தாக்கத்தை ஏற்படுத்தி இருகிறது. மேலும் சமீபத்தில் நடந்து முடிந்த பாகிஸ்தான் vs இலங்கை போட்டியிலும் கூட பாஸ்கிதான் அதிக ரன்களை விளாசியது. இந்நிலையில் இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டை எடுத்துக்கொண்டால். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக சிறப்பாக விளையாடிய இந்தியா முதல் டெஸ்ட் போட்டியில் அற்புதமாக விளையாடி வெற்றி பெற்றது.
அதே போல இரண்டவது போட்டியிலும் சிறப்பாக விளையாடி 438 ரன்களை குவிக்க, வெஸ்ட் இண்டீஸ் பதிலுக்கு 255 ரன்கள் குவித்தது. இந்த போட்டியில் இந்தியாவிற்கே அதிக சாதகமான போட்டி என்றாலும் மழை வரும் என்று கூறப்படத்தினால் இந்திய தங்களுடைய இரண்டாவது இன்னிங்கை மிக வேகமாக விளையாடி 2 விக்கெட்டுகளை இழந்து 181 எடுத்து டக்ளர் கொடுத்தது. இதையடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியானது 76 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்த நிலையில் மொத்தமாக ஆட்டமிழந்தது.

இப்படிப்பட்ட நிலையில் தான் இந்த போட்டி முடிந்த பிறகு இரண்டாவது போட்டியில் வேகமாக அரை சதம் விளாசிய இஷான் கிஷனிடம் இங்கிலாந்து விளையாடிய பாஸ்பால் முறை போல இண்டியாய் அணியால் விளையாட முடியுமா என்று கேள்வி கேட்கப்பட்டது.
இஷான் கிஷான் பேட்டி :
அதற்கு பதிலளித்த அவர் கூறுகையில் “எப்போதுமே உங்களினால் அது போன்று வேகமாக விளையாட முடியாது அதற்கான அவசியமும் கிடையாது. அது சூழ்நிலையை பொறுத்துதான் இருக்கும். ஒரு வீரர் எப்படி ரன்களை எடுப்பார் என்பது மைத்தனத்தை பொறுத்து இருக்கிறது. நாங்கள் விளையாடும் மைதனைக்ள் பல பேட்டிங் செய்வதற்கு மிகவும் கடுமையாக பவுன்சும் திரும்புவதுமாக பிட்ச் இருந்தது. அந்த மாதிரியான பிச்சில் விரைவாக ரன் எடுக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது.

விக்கெட் தட்டையாக இருந்து உங்களினால் ரன்களை வேகமாக அடிக்க முடியும் என்றால் நீங்கள் விரைவாக ரன்களை விளாசலாம். ஆனால் எல்லா போட்டிகளிலும் அதிரடியாக ஆடவேண்டும் என்று கிடையாது என நான் நினைக்கிறேன். ஆனால் நீங்கள் அடித்து ஆடவேண்டிய சூழ்நிலை ஏற்படும் போது அப்படி ஆடலாம். மேலும் அதனை செய்வதற்கு எங்களுடன் வீரர்களும் இருகின்றனர். ஆனால் பொதுவாக அப்படி டெஸ்ட் போட்டியில் விளையாட தேவையில்லை என்றுதான் நினைக்கிறேன் என்றார் இஷான் கிஷான்.




