ஐபிஎல் 2023 தொடரில் நேற்று நடந்த 17வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின.டாஸ் வென்ற சென்னை அணி பௌலிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் ஆடிய ராஜஸ்தான் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 175 ரன்களை குவித்தது.அந்த அணியில் அதிகபட்சமாக பட்லர் 36 பந்துகளில் 52 ரன்களை அடித்த நிலையில் மொயின் அலியிடம் விக்கெட்டை இழந்தார்.அதன் பின் ஹெட்மயர் 18 பந்துகளிலே 30 ரன்களை குவித்து அணிக்கு பலம் சேர்த்தார். போட்டி முடிந்த பிறகு அஷ்வின் பேசிய வீடியோ இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

176 என்ற இலக்கை நோக்கி விளையாடிய சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர் ருதுராஜ் ஆரம்பத்தில் இருந்தே தடுமாறி வந்தார். அதன் தொடர்ச்சியாகவே 8ரன்களில் சந்தீப் சர்மாவிடம் விக்கெட்டை பறிகொடுத்தார்.அந்த விக்கெட்டுக்கு பின் களமிறங்கிய ரஹானே சிறப்பாக ஆடி 19 பந்துகளிலே 31 ரன்களை அடித்த நிலையில் அஷ்வின்னிடம் ஆட்டமிழந்தார். டுபே மற்றும் மொயின் அலி சொற்ப ரன்களிலே அவுட் வெளியேறினார்.அதன் பின் பெரிதும் எதிர் பார்க்கப்பட்ட ராயுடு 1 ரன்னை மட்டுமே எடுத்து சஹலிடம் விக்கெட்டை இழந்தார்.சென்னை அணிக்கு மேலும் மேலும் மன அழுத்தத்தை ஏற்படுத்தியது. ஒரு பக்கம் நிதனமாக ஆடிய கான்வே 37 பந்துகளில் 50 ரன்களை அடித்தார்.இந்த நிலையில் அவரும் ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தார்.அரை சதம் அடித்த அடுத்த பந்திலே விக்கெட்டை சஹலிடம் இழந்தார். கேப்டனாக 200 வது போட்டியில் பேட்டிங்கில் களமிறங்கிய தல தோனி 17 பந்துகளில் 32 ரன்களை அடித்தார்.இருப்பினும் அந்த போட்டியில் சென்னை அணி தோல்வியை தழுவியது.
அஷ்வின் பேசிய வீடியோ
ராஜஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் ரவிச்சந்திர அஷ்வின் சென்னையை சேர்ந்தவர். இவர் முந்தைய காலங்களில் சென்னை அணிக்காகவும் விளையாடி உள்ளார்.
அன்பே சஞ்சு 💚💚💚🌹🌹@IamSanjuSamson 😍😍😍@ashwinravi99 வேற லெவல்…. 😎 #RR #SanjuSamson pic.twitter.com/6peIcmN7wW
— சரண்யா (@saranya121289) April 13, 2023
அதனால் அவருக்கு சென்னை அணியை பற்றியும் மைந்தனத்தின் பிட்ச்யை பற்றியும் நன்றாக தெரியும். சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டி முடிந்த பிறகு போட்டியை பற்றி அஷ்வின் கூறுகையில்,” மைதானம் முழுவதும் மஞ்சள் படையாகவே இருந்தது என்றும்”,”கடைசியில் சரியான பினிஷிங் “என்றும் கூறினார்.





