இந்திய அணி தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகளை இந்திய அணி 26ஆம் தேதி விளையாட உள்ளது. இந்திய அணி இதற்க்கு முன்னதாக T20 போட்டி மற்றும் ஒருநாள் போட்டியை விளையாடியது. அதில் T20 போட்டி 1 – 1 என்று சமனில் முடிந்தது. அதன் பின் ஒருநாள் போட்டியை 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. அதன் பின் டெஸ்ட் போட்டிக்காக இந்திய அணி தயாராகி கொண்டு வருகிறது. இந்திய அணியின் நட்சத்திர இந்திய பேட்டர் விராட் கோலி, டெஸ்ட் கிரிக்கெட் மீதான தனது ஆர்வத்தைப் பற்றி கூறினார்.

நான்கு அல்லது ஐந்து நாட்களுக்கு நீடிக்கும் ஆட்டத்தின் சுவாரஸ்யம் அனுபவத்திற்கு நம்பமுடியாதது என்பதை வெளிப்படுத்தினார். கோலி அனைத்து வடிவங்களிலும் சிறந்த பேட்டர்களில் ஒருவர். 111 போட்டிகளில் 8,676 ரன்களுடன் சராசரியாக 49.29 என்ற 35 வயதான இவரின் டெஸ்ட் சாதனை மிகவும் நம்பிக்கைக்குரியது. வலது கை ஆட்டக்காரர் இந்தியாவின் டெஸ்ட் கேப்டனாக ஒரு சிறந்த சாதனையைப் பெற்றுள்ளார், ஆஸ்திரேலியாவில் ஒரு முக்கிய தொடர் வெற்றி உட்பட 68 டெஸ்ட் போட்டிகளில் 40 வெற்றிகளுக்கு அணியை வழிநடத்தினார்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான t20 மற்றும் ஒருநாள் போட்டியிலும் அவருக்கு அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை, டிசம்பர் 26 ஆம் தேதி செஞ்சூரியனில் தொடங்கும் இரண்டு டெஸ்ட் தொடருக்கு விராட் கோலி அணியில் இடம் பெற்றுள்ளார். மேலும் இதில் இந்திய அணியின் இளம் வீரர் ருதுராஜ் விலகிய நிலையில் அவருக்கு பதிலாக அபிமன்யு ஈஸ்வரன் அணையில் இணைந்துள்ளார். மேலும் இளம் இந்திய வீரர்கள் எவ்வாறு செயல்படுகிறார்கள் என்ற ரசிகர்களின் பார்வையும் அவர்கள் மீது வீழுந்துள்ளது.

குறிப்பாக ஜெய்ஸ்வால் எவ்வாறு விளையாடுவார் என்றும் அனைவரும் ஆவலாக இருகின்றனர். அதற்க்கான காரணம் என்னவென்றால் அவர் தான் ரோஹித் ஷர்மாவும் டெஸ்ட் போட்டியில் தொடக்க வீரரராக களமிறங்க உள்ளார். இது குறித்து முன்னாள் இந்திய வீரர் கம்பீர் கூறுகையில், ஜெய்ஸ்வால் பிரண்ட் பூட் மற்றும் பேக் பூட்டில் சிறப்பாக விளையாடக்கூடிய திறமையான வீரர் ஆனால் தென்னாப்பிரிக்கா மைதானம் சற்று வித்தியாசமான சூழல் மற்றும்வேகப்பந்து பவுன்ஸ் கொண்ட ஆடுகளமாக இருக்கின்றது.
இது வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆசியாவில் உள்ள ஆடுகளம் போல் தான் இருக்கின்றது. தென் ஆப்பிரிக்காவில் டெஸ்ட் போட்டியில் விளையாடுவது மிகவும் சவாலாகவே இருக்கும். இருப்பினும் அவர் நிச்சயமாக சிறப்பாக செயல்படுவார். ஒரு இளம் வீரர் வந்து இங்கு எடுத்ததும் சதத்தை எல்லாம் அடிப்பார் என்று நினைக்க வேண்டாம். அவரால் சதம் அடிக்க முடியாது என்றெல்லாம் சொல்லவில்லை. ஆனால் ஜெய்ஸ்வால் 20 முதல் 30 ரன்கள் எடுத்து இந்திய அணிக்கு நல்ல தொடக்கத்தை கொடுத்தாலே அவர் சிறந்த வீரராக அவரால் உருவாக்க முடியும்.

10,15 ஆண்டுகளாக முன்னாள் தென்ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு சுற்று பயணம் செய்யும்போது வீரர்கள் இவ்வளவு ஆராய்ச்சியில் ஈடுபட்டது கிடையாது. இந்தியாவில் ரன் அடிக்கவில்லை என்றால் எவ்வளவு விமர்சிக்கப்படுவார்களோ அந்த அளவிற்கு அங்கும் விமர்சிக்கப்படுவார்கள். அது அங்கு நடக்க கூடாது என்றும் அவர் கூறியிருந்தார்.





