இந்திய அணி தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான சுற்றுப்பயணத்தில் T20 மற்றும் ODI போட்டிகள் முடிவடைந்த நிலையில் தற்போது இந்திய அணிய டெஸ்ட் போட்டிகளை விளையாடி வருகிறது. அதில் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தென் ஆப்பிரிக்கா அணியிடம் தோல்வியை தழுவி இருந்தது. இன்றைய போட்டி முந்தைய போட்டிக்கு முழுவதும் மாறுபட்டு இருந்தது. அந்த போட்டியானது மூன்று நாட்களிலே முடிவடைந்த நிலையில் இந்திய அணியின் மோசமான பேட்டிங் மற்றும் பவுலிங் காரணமாக தோல்வியை தழுவியது.

தென்னாப்பிரிக்கா அணி முதல் நாள் இன்னிங்க்ஸில் இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 55 ரன்னில் ஆட்டமிழந்தனர். தென்னாப்பிரிக்கா அணி சார்பில் அதிக பட்சமாக வெர்ரின்னே 15 ரன்களும் பெடிகம் 12 ரன்னிலும் ரபாடா 5 ரன்னில் ஆட்டமிழந்தனர். இந்திய அணி சார்பில் சிராஜ் 6 விக்கெட்டுகளையும் பும்ரா மற்றும் முகேஷ் குமார் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அணியை சுருட்டி இருந்தனர். அதன் பின் முதல் மீண்டும் பேட்டிங் செய்ய வந்த இந்திய அணி 153 ரன்னில் அனைத்து விக்கெட்டுகளை இழந்தது. இதில் 7 இந்திய வீரர்கள் ரன் ஏதும் எடுக்கவில்லை.
இந்திய அணியின் அதிகபட்சமாக கோலி 46 ரன்களிலும் ரோஹித் 39 ரன்களும் கில் 36 ரன்களும் அடித்து இருந்தனர். அதே நாளில் 2வது இன்னிங்க்சில் மீண்டும் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி நேற்றைய நாள் முடிவில் 62-3 என்ற நிலையில் இருந்தது. இன்றைய நாள் தொடக்கத்தில் இருந்தே இந்திய அணியின் அதிகம் தான் அதிகம் இருந்து. இதில் தென்னாப்பிரிக்கா அணி 176 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துள்ளது.

இதில் அதிகபட்சமாக மார்கரம் 106 ரன்னிலும் ஜான்சன் 11 ரன்னிலும் பெடிகம் 11 ரன்களை மட்டுமே எடுத்து இருந்தனர். இந்திய அணி சார்பில் பும்ரா 6 விக்கெட்டுகளும் முகேஷ் குமார் 2 விக்கெட்டுகளும் சிராஜ் மற்றும் பிரசித் கிருஷ்ணா தலா ஒரு விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருந்தனர். 79 ரன்கள் தென்னாப்பிரிக்கா அணி முன்னிலையில் இருந்த நிலையில் அதன் பின் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை சமன்படுத்தி இருந்தது. இது போட்டி குறித்து ரோஹித் ஷர்மா கூறுகையில்,
வெளிப்படையாக ஒரு பெரிய சாதனை, ஆனால் நாம் செய்த தவறுகளிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறியது. பந்து வீச்சாளர்கள் இன்னும் பந்தை சரியான பகுதிகளில் வைக்க வேண்டும். 100 ரன்கள் முன்னிலை பெற நாங்கள் நன்றாகப் பயன்படுத்தினோம், பேட் செய்தோம், ஆனால் கடைசி ஆறு விக்கெட்டுகளை [ரன் ஏதுமின்றி வீழ்ந்தோம்] பார்க்க மகிழ்ச்சியடையவில்லை. சிராஜின் மந்திரம் அடிக்கடி பார்க்க முடியாத ஒன்று.

ஆடுகளம் எங்களுக்கு மற்றதைச் செய்தது. நீங்கள் இன்னும் வந்து செய்ய வேண்டும். சிராஜ் மற்றும் பும்ரா மற்றும் முகேஷ் மற்றும் பிரசித் அவர்கள் எந்த வழியில் செய்தாலும் அவருக்கு ஆதரவாக இருக்க வேண்டும். உலகின் இந்தப் பகுதிக்கு நீங்கள் வரும்போது, அது எப்பொழுதும் கடினமாகவே இருக்கும், ஆனால் இந்தியாவிற்கு வெளியே எங்களின் செயல்திறனைப் பற்றி நாங்கள் பெருமை கொள்கிறோம். தென்னாப்பிரிக்கா எப்போதுமே எங்களுக்கு சவால் விடும், நாங்கள் இங்கு வந்து வெற்றி பெற, இந்த செயல்திறனில் பெருமை கொள்ளலாம் என்றும் அவர் கூறியிருந்தார்




