WTC இறுதிப் போட்டியில் வெற்றி பெற்றதைப் பற்றி மகிழ்ச்சி தெரிவித்த ஆஸ்திரேலிய அணியின் கேப்டன். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதி போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா இடையேயான போட்டி இங்கிலாந்தில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இன்று அதாவது ஜூன் 9ஆம் தேதி இறுதிப் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் நடைபெற்று வந்தது. இந்திய அணி 444 ரன்களை எடுத்தால் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றும் நம்பிக்கையுடன் போட்டியை தொடங்கிய இந்திய அணிக்கு ஆரம்பத்தில் நிதனமான தொடக்கமே கிடைத்தது.

18 ரன்களில் ஷுப்மன் கில் தனது விக்கெட்டை இழந்தார் அந்த கேட்சானது மிகவும் சர்ச்சைகுள்ளாகியது. அதன் பிறகு ரோஹித் ஷர்மா 43 ரன்களிலும், புஜாரா 27 ரன்னிலும், அவுட்டாகி வெளியேற இந்திய அணிக்கு மொத்தமாக இருந்த நம்பிக்கை எல்லாம் விராட் கோலி மேல் சென்றது. விராட் கோலியால் மட்டுமே தான் அணியை வெற்றி பெற வைக்க முடியும் என எதிர்பார்த்து இருந்தனர். அனைவருக்கும் ஏமாற்றத்தையே அளித்தார். அதாவது 49 ரன்கள் இருத்த நிலையில் ஸ்மித்திடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
அதன் பிறது இந்திய அணிக்கு இருந்த நம்பிக்கை அனைத்தும் சென்று விட்டது. ஜடேஜா ரன் ஏதும் எடுக்காமல் விக்கெட்டை இழந்தார். அதன் பிறகு வந்த அனைத்து வீரர்களும் சொதப்பியே வெளியேறினர்கள். ரஹானே 46 ரன்களிலும், தாக்கூர் ரன் ஏதும் எடுக்காமலும் விக்கெட் இழந்து வெளியேறினார். உமேஷ் யாதவ் 1 ரன்னிலும், பாரத் 23 ரன்களிலும், சிராஜ் ஒரு ரன்னிலும் விக்கெட்டை இழந்தனர். அதனால் ஆஸ்திரேலிய அணி 209 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.

பேட் கம்மின்ஸ் கூறியது,
நாங்கள் நிச்சயமாக பந்து வீசப் போகிறோம் என்று நினைத்தோம். டிராவிஸ் மற்றும் ஸ்மித்தி அந்த பார்ட்னர்ஷிப்பை வைத்த விதம், எங்களுக்கு நன்றாக அமைந்தது. அவர் பந்துவீச்சாளர்களுக்கு அழுத்தத்தை மீண்டும் கொடுக்கிறார், திடீரென்று நீங்கள் விக்கெட்டுகளை எடுப்பதை விட ரன்களை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்று யோசிக்கிறீர்கள் என்றார். முதல் நாள் ஆட்டத்தில் நாங்கள் உச்சத்தில் இருப்பது போன்ற உணர்வை விட்டுவிட்டோம்.

அனைவரும் நன்றாக விளையாடினார்கள், சில வருடங்கள் இதை ரசிப்போம், நாங்கள் எங்கள் கவனத்தை (ஆஷஸ் பக்கம்) திருப்புவோம். இது எங்களுக்கு பிடித்தமான பார்மட், நாங்கள் டெஸ்ட் கிரிக்கெட் பார்த்து வளர்ந்தவர்கள். அது உங்களுக்கு சவால் விடுகிறது. நீங்கள் வெற்றிபெறும் போது, நீங்கள் மிகவும் திருப்தி அடைவீர்கள். நாங்கள் விளையாடுவதை விரும்புகிறோம்.





