இந்தியன் பிரீமியர் லீக்கின் சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இந்திய அணியின் நட்சத்திர வீரராக உருவெடுத்துளார் தொடக்க ஆட்டக்காரர் ஷுப்மன் கில். இந்த சீசனில் கில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி மூன்று சதங்களுடன் 890 ரன்கள் எடுத்தார். மேலும் ஐபிஎல் 2023 தொடரின் பிளேஆஃப் கட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக இவர் எடுத்து கொடுத்த 60 பந்துகளில் 129 ரன்கள் குஜராத் வெற்றிபெற முக்கியமானதாக அமைந்தது.

மேலும் ரசிகர்கள் முதற்கொண்டு முன்னாள் வீரர்களும் சுப்மன் கில்லை பாராட்டி வருகின்றனர். கில் இந்த ஐபிஎல் சீசனில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தார். இதனை மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்களை குவித்த வீரர் என்ற பெருமையையும் பெற்றார். முதல் இடத்தில் 2016 சீசனில் விராட் கோலியின் 973 ரன்களுடன் உள்ளார். மேலும் இறுதிப் போட்டியைத் தொடர்ந்து மேன் ஆஃப் தி டோர்னமினேட் விருதும் வழங்கப்பட்டது.
அதுமட்டுமல்லாது இந்திய கிரிக்கெட்டை பொறுத்தவர்யில் டி20, ஒரு நாள் போட்டி, டெஸ்ட் என நான்கு போட்டிகளிலும் சதம் அடித்த வீரர் என்ற பெருமையையும் பெற்று தற்போது இந்திய அணியின் முக்கிய வீரராக திகழ்ந்து வருகிறார். அப்படிப்பட்ட நிலையில் தான் இந்திய னையின் முன்னாள் பயிற்சியாளரும், குஜராத் அணியின் பேட்டிங் கோச்சாக இருக்கும் கேரி கிர்ஸ்டன் சுப்மன் பற்றி பேசியுள்ளார்.

கிர்ஸ்டன் கூறியது :
கிர்ஸ்டன் கடந்த காலத்தில் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக சச்சின் டெண்டுல்கர் மற்றும் விராட் கோலி ஆகியோருடன் பணியாற்றியவர். அப்படிப்பட்ட நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய கிர்ஸ்டன் கூறியதாவது “கில் உலகின் தலைசிறந்த வீரர்களில் ஒருவராக தபோது இருக்கிறார். தான் சிறந்த வீரராக இருக்க வேண்டும் என நம்பமுடியாத வகையில் திறமைகளை கொண்டிருப்பவர்.
ஆனால் அவருடைய கிரிக்கெட் பயணத்தின் ஆரம்பத்தில் அவரை சச்சின் மற்றும் விராட் ஆகியோருடன் ஒப்பிடுவது நியாயமற்றது என்று கிர்ஸ்டன் கிரிக்பஸிடம் கூறினார். மேலும் இந்தியாவுக்காக மூன்று வடிவங்களிலும் வெற்றிகரமாக விளையாடும் ஆட்டம் அவரிடம் இருப்பதாக நான் நம்புகிறேன். இந்த நாட்களில், குறிப்பாக டி20 கிரிக்கெட் மிகவும் வேகமாக வளர்ச்சியடைந்து முன்னேறி வருவதை நீங்கள் அடிக்கடி பார்க்க மாட்டீர்கள்.

கில் தன்னுடைய திறமையினால் தன்னால் மூன்று கிரிக்கெட் வடிவங்களிலும் சிறப்பாக செய்யப்பட முடியும் என்று காட்டியுள்ளார். அவர் ஒரே நேர்கோட்டில் விளையாடுகிறார். ரன்கள் தேவைப்படும் நேரத்தில் அவரால் அணிக்கு ரன்களை பெற்றுத்தர முடியும். எனவே அவரிடம் மூன்று வகையான கிரிக்கெட் போட்டியிலும் விளையாட முடிந்தாலும் அவர் அதை எப்படி சமாளிக்கிறார், தொடர்ந்து எப்படி முன்னேறுகிறார் என்பதை பொறுத்தே அவருடைய நீண்ட கால வெற்றியை உறுதிசெய்ய முடியும் என்று கூறினார் கிர்ஸ்டன்




