உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த உலக கோப்பை 2023 தற்போது இந்தியாவில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அதில் நேற்றைய 33வது போட்டியில் இந்திய அணியும் ஸ்ரீலங்கா அணியும் மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மோதின. இந்திய அணி இதுவரை விளையாடிய 6 போட்டிகளிலும் ஒரு தோல்வியை கூட தழுவாமல் புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்திலிருந்து வருகிறது. டாஸ் வென்று இலங்கை பௌலிங் தேர்வு செய்தது.

92 ரண்களை நெருங்கிய நிலையில் சுப்மான் கில் மதுசங்க வீசிய பந்தில் விக்கெட் கீப்பர் மென்டீஸ்ஸிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆகி வெளியேறினார். இந்தப் போட்டியில் விராட் கோலி சதத்திற்கு நெருங்கி சச்சினின் சாதனையை சமன் செய்வார் என எதிர்பார்த்து கொண்டு இருந்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினார்.மற்றொரு பக்கம் நிதானமாக ஆடி ரண்களை குவித்து கொண்டிருந்த ஷ்ரேயஸ் ஐயர் 56 பந்துகளில் 82 ரன்கள் அடித்த நிலையில் அவரும் ஆட்டம் இழந்து வெளியேறினார். முகமது ஷமி 2 ரன்கள் ஆட்டம் இருந்து வெளியேற ரவீந்திர ஜடேஜா 35 ரன்கள் குவித்து நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 357 ரன்களை குவித்தது இந்திய அணி.இலங்கை அணிக்கு 358என்ற மாபெரும் இலக்கை நிர்ணயித்துள்ளது இந்திய அணி.
358 ரன்களை இலக்காகக் கொண்டு களமிறங்கிய இலங்கை அணி ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து மாபெரும் தோல்வியை தழுவியது. இலங்கை அணிக்கு அதிகபட்சமாக ஏஞ்சலோ மேத்யூஸ் 12 ரன்களும் தீக்ஷனா 6 ரன்களும் ரஜித்தா ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இந்திய அணி சார்பில் சிராஜ் விக்கெட்டுகளும் ஷமி விக்கெட்டுகளும் பும்ரா விக்கெட்டுகளும் வீழ்த்தி இந்திய அணி இலங்கை அணியை எளிதாக 300 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி பெற்று மீண்டும் முதல் இடத்திற்கு சென்றுள்ளது. இது குறித்து பேசிய இலங்கை அணியின் பயிற்சியாளர் கூறுகையில்,

நேற்றைய போட்டியில் தோல்வி குறித்து பேசி இலங்கை அணியின் பயிற்சியாளர் நவீத் நவாஸ் கூறுகையில் இது நிச்சயமாக ஒரு கவலைக்குரிய விஷயம். நேற்றைய தோல்வியை நான் இலங்கை அணியின் வீழ்ச்சியாக பார்க்கவில்லை. எங்களிடம் 100 ஒரு நாள் போட்டிகளை விளையாடிய வீரர்களும் மீதம் பெரும்பான்மையோ இளம் வீரர்களாக இருக்க உள்ளனர். நாங்கள் அணியை தற்போது மறு கட்டமைப்பு செய்ய வேண்டியதற்கான நேரம் இது தான். இன்னும் பல இளம் வீரர்கள் உள்ளே சொல்லிக் கொடுத்து கற்றுக்கொண்டு இருக்கின்றார்கள்.

அவர்கள் வந்தால் இன்னும் அணி சிறப்பாக இருக்கும். செய்த தவறில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு ஒரு காலங்களில் சிறப்பாக ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்திக் கொள்வோம். தற்பொழுது தான் உங்களிடம் உள்ள ஒரே ஒரு நம்பிக்கை. அடுத்ததாக பாகிஸ்தானில் நடைபெறவிருக்கும் சாம்பியன் டிராபிக் புள்ளி பட்டியலில் முதல் 8 அணிகளுக்கு மட்டுமே இடம்பெறும். இதற்காக எங்கள் அணியை ஊக்குவிக்க காரணங்களை நாங்கள் தேடி கண்டுபிடிக்க வேண்டும். தங்களிடம் இளம் அணி அழகாக இருக்கின்றது. நாங்கள் நிச்சயம் மீண்டு வருவோம் என்று அவர் கூறியிருந்தார்.



