தென்னாப்பிரிக்கா மண்ணில் தோனியின் சாதனயை சமன் செய்த ரோஹித் ஷர்மா. இந்திய அணி தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான சுற்றுப்பயணத்தில் T20 மற்றும் ODI போட்டிகள் முடிவடைந்த நிலையில் தற்போது இந்திய அணிய டெஸ்ட் போட்டிகளை விளையாடி வருகிறது. அதில் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தென் ஆப்பிரிக்கா அணியிடம் தோல்வியை தழுவி இருந்தது. இன்றைய போட்டி முந்தைய போட்டிக்கு முழுவதும் மாறுபட்டு இருந்தது. அந்த போட்டியானது மூன்று நாட்களிலே முடிவடைந்த நிலையில் இந்திய அணியின் மோசமான பேட்டிங் மற்றும் பவுலிங் காரணமாக தோல்வியை தழுவியது.

தென்னாப்பிரிக்கா அணி முதல் நாள் இன்னிங்க்ஸில் இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 55 ரன்னில் ஆட்டமிழந்தனர். தென்னாப்பிரிக்கா அணி சார்பில் அதிக பட்சமாக வெர்ரின்னே 15 ரன்களும் பெடிகம் 12 ரன்னிலும் ரபாடா 5 ரன்னில் ஆட்டமிழந்தனர். இந்திய அணி சார்பில் சிராஜ் 6 விக்கெட்டுகளையும் பும்ரா மற்றும் முகேஷ் குமார் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அணியை சுருட்டி இருந்தனர். அதன் பின் முதல் மீண்டும் பேட்டிங் செய்ய வந்த இந்திய அணி 153 ரன்னில் அனைத்து விக்கெட்டுகளை இழந்தது. இதில் 7 இந்திய வீரர்கள் ரன் ஏதும் எடுக்கவில்லை.

இந்திய அணியின் அதிகபட்சமாக கோலி 46 ரன்களிலும் ரோஹித் 39 ரன்களும் கில் 36 ரன்களும் அடித்து இருந்தனர். அதே நாளில் 2வது இன்னிங்க்சில் மீண்டும் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி நேற்றைய நாள் முடிவில் 62-3 என்ற நிலையில் இருந்தது. இன்றைய நாள் தொடக்கத்தில் இருந்தே இந்திய அணியின் அதிகம் தான் அதிகம் இருந்து. இதில் தென்னாப்பிரிக்கா அணி 176 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துள்ளது.
இதில் அதிகபட்சமாக மார்கரம் 106 ரன்னிலும் ஜான்சன் 11 ரன்னிலும் பெடிகம் 11 ரன்களை மட்டுமே எடுத்து இருந்தனர். இந்திய அணி சார்பில் பும்ரா 6 விக்கெட்டுகளும் முகேஷ் குமார் 2 விக்கெட்டுகளும் சிராஜ் மற்றும் பிரசித் கிருஷ்ணா தலா ஒரு விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருந்தனர். 79 ரன்கள் தென்னாப்பிரிக்கா அணி முன்னிலையில் இருந்த நிலையில் அதன் பின் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை சமன்படுத்தி இருந்தது.

ஆனால் இதில் ஜடேஜா ஏதும் அவருடைய பங்களிப்பை அவர் அளிக்க வில்லை. முதல் போட்டியில் ஏற்பட்ட தோல்வியின் காரணமாக இந்திய அணி அஷ்வினுக்கு பதிலாக ஜடேஜாவை களமிறக்கியது. ஆனால் அவர் முதல் இன்னிங்க்ஸில் அவர் ஒரு பந்தை கூட வீசவில்லை. அதன் பின் பேட்டிங் செய்ய வந்த போது கூட அவரால் ஒரு ரன் கூட அடிக்க முடியவில்லை. 0 ரன்னிலே அவர் ஆட்டமிழந்தார். இரண்டாவது இன்னிங்க்சில் கூட அவர் ஒரு பந்தை கூட வீசவில்லை. மொத்தத்தில் அவர் பீல்டிங் மட்டுமே செய்து இருந்தார்.




