இந்திய அணியானது மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட நிலையில் தற்போது இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியானது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் ஏற்கனவே வெஸ்ட் இண்டீஸ் 2 போட்டிகளில் வெற்றி பெற்ற நிலையில் 1 போட்டியில் இந்தியா வெற்றி பெற்றவுள்ளது. இந்நிலையில் இந்த தொடரின் 3 வது போட்டியில் தொடக்க வீரர்கள் தடுமாறிய நிலையில் திலக் வர்மா மற்றும் சூரிய குமார் யாதவ் இருவதும் இணைத்து சிறப்பாக விளையாடினார்கள்.

ஆனால் தொடக்க வீரர்களாக களமிறங்கிய சுப்மன் கில் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் மிகவும் மோசமாக விளையாடினார்கள். சொல்லபோனால் தன்னுடைய முதல் டெஸ்ட் போட்டியில் கலக்கிய ஜெய்ஸ்வால் தனக்கு கிடைத்த டி20 போட்டியிலும் அசத்துவார் என்று எதிர்பார்கப்பட்டது. ஆனால் துரதிஷ்டவசமாக ஆட்டமிழந்தார். ஆனால் இந்த தொடரில் அதிகமாக விமர்சிக்கப்படும் வீரர் என்றால் அது சுப்மன் கில் தான்.
ஏனென்றால் கடந்த உலக சாம்பியன் ஷிப் போட்டியில் தொடக்க வீரராக களமிறங்கிய சுப்மன் கில் விரைவாகவே ஆட்டமிழந்தார். அது இந்திய அணியின் தோல்விக்கு காரணமாகியது. மேலும் வெஸ்ட் இண்டீஸ் தொடரிலும் டெஸ்ட் போட்டியில் மோசமாக செயல்பட்ட கில் முதல் ஒருநாள் போட்டியில் சொதப்பினாலும் அதற்கு அடுத்த போட்டியில் விளையாடினார். ஆனால் துரதிஷ்டவசமாக டி20 போட்டிகளால் சொதப்பினார்.

இதனால் சுப்மன் கில் கடுமையாக நெட்டிசன்கள் மத்தியில் டிரோல்களுக்கு உள்ளாகினர். மேலும் இவரை அஹமதாபாத் மைத்தனத்தில் மட்டும்தான் சரியாக விளையாட முடியும் என்றும், சம தளத்தில் விளையாடும் வீரர் என்றும் விமர்சித்தார்கள். அப்படிப்பட்ட நிலையில் தான் சுப்மன் கில் குறித்து பேசியுள்ளார் வாசிம் ஜாபர்.

அவர் கூறுகையில் “வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் இருக்கும் மைதானங்களில் நீங்கள் சற்று காத்திருக்க வேண்டும். மாறாக சுப்மன் விருப்பத்திற்கேற்றார் போல் பந்தின் ரைசில் அடிக்க முடியாது. அதை விட அனைத்து இடங்களிலும் அகமதாபாத் போன்ற சூழ்நிலைகள் நமக்கு கிடைக்காது என்பதை முதலில் அவர் புரிந்து கொள்ள வேண்டும். எனவே மற்ற மைதானங்களுக்கு ஏற்றார் போல் தம்மை உட்படுத்திக் கொள்ளும் திறமையை கற்றுக் கொண்டால் அது அவருக்கு அதிசயங்களை நிகழ்த்தும்.
மேலும் இத்தொடரில் ஜெய்ஸ்வால் ஆக்ரோஷமான அணுகுமுறையுடன் விளையாடுகிறார். ஆனால் சுப்மன் கில் துடுப்பாட்ட முறையை பின்பற்றுவதாக நான் கருதுகிறேன். ஒருவேளை 2 – 3 நல்ல ஷாட்களை அடித்து நல்ல துவக்கத்தை பெரும் பட்சத்தில் அது அவருடைய ஆட்டத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தலாம் என்றார் வாசிம் ஜாபர்.




