தனி ஒரு மனிதராக போராடி இந்திய அணிக்கு ரன்களை குவித்தார் ஜெய்ஸ்வால். இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் 5 தொடர்களை கொண்ட டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 28 ரன்களில் இந்திய அணியை வீழ்த்தி மாபெரும் வெற்றி பெற்றது.நேற்று இரண்டாவது போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் தேர்வு செய்திருந்தது. இந்தப் போட்டியானது விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இந்திய அணி ஆரம்பத்தில் மெதுவான தொடக்கத்தை அளித்து இருந்தாலும் அதன் பின் சிறப்பாகவே விளையாடி கொண்டு இருந்தது. ரோஹித் ஷர்மா 14 ரன்களில் ஆட்டம் இழந்து வெளியேறி இந்திய அணி ஏமாற்றத்தை அளித்திருந்தார். அதன் பின்வந்த சுப்மான் கில் 34 ரன்கள் ஆட்டம் இழந்து வெளியேறி தனக்கு அளிக்கப்படும் வாய்ப்பை இழந்து கொண்டே வருகிறார். அதன் பின் ஸ்ரேயாஸ் ஐயர் 27 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர்.

இவர்கள் இரண்டு பேர் மீதும் சமிபத்தில் சில குற்றச்சாட்டுகள் வந்த வண்ணமே உள்ளது இந்த இரண்டு வீரர்களையும் நீக்கி விட்டு இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கலாம் என்று பலர் கருத்துகளை கூறி வந்தனர். ஆனால் இந்த போட்டியில் விராட்கோலிஜடேஜா கே.எல்.ராகுல் ஆகியோர் இல்லாத காரணத்தினால் மட்டுமே இந்த இரண்டு வீரர்களும் இந்த போட்டியில் விளையாடி உள்ளனர். இருப்பினும் அவர்கள் தங்களை நிருப்பிக்க தவறிவிட்டனர்.
இந்திய அணி இன்றைய நாளில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 396 ரன்களை குவித்து இருந்தது. இதில் ஜெய்ஸ்வால் மட்டுமே தனி ஒரு மனிதராக போராடி 209 ரன்களை குவித்து இருந்தார். இதில் அவர் 19 பவுண்டரிகளும் 7 சிக்சர்களும் அவர் அடித்து இருந்தார். இந்திய அணியின் தூணாக இருந்து இந்திய அணிக்கு ரன்களை குவிக்க உதவி இருந்தார். அதற்க்கு பிறகு அதிகபட்சமாக கில் 34 ரன்களும் படிதார் 32 ரன்களையும் அடித்து இருந்தார்.

இங்கிலாந்து அணி சார்பில் பந்துவீச்சாளர் அண்டர்சன், அகமது மற்றும் பஷிர் தலா மூன்று விக்கெட்டுகளையும் ஹார்ட்லி ஒரு விக்கெட்டை வீழ்த்தி இருந்தனர். இதில் ஜெயஸ்வால் பல சாதனைகளை தகர்த்தி உள்ளார். இந்த WTC உலகக்கோப்பையில் இரட்டை சதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனயையும், கோலி, அகர்வால், ரோஹித்துக்கு பிறகு டபுள்யூடிசியில் இரட்டை சதம் அடித்த 4வது இந்தியர் என்ற பெருமையை யாசஸ்வி ஜெய்ஸ்வால் பெற்றார்.




