ஐபிஎல் 2023 தொடரானது கடந்த சில நாட்களுக்கு முன்னர் கோலாகலமாக நடந்து முடிந்தது. இந்த வருட ஐபிஎல் தொடரில் தொடக்கம் முதல் அற்புதமாக விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பைனல் போட்டியில் மோதியது. இதில் பல சுவாரசியமான நிகழ்வுகள் நடந்து மழையால் போட்டி 15 ஓவர்களாக குறைக்கப்பட்ட நிலையில் சென்னை அணியின் ஜடேஜா கடைசி 2 பந்தில் 10 ரன்களை விளாசி வெற்றியை சென்னை அணிக்கு தேடி கொடுத்தார்.

இந்நிலையில் ஜியோ சினிமாவில் தமிழ் ஐபிஎல் ஒளிபரப்பை தொகுத்து வழங்குபவர் சமீனா. இவர் இந்த ஐபிஎல் சீசன் முழுவதும் தொகுத்து வழங்கினார். மேலும் வர இன்ஸ்டாகிராமில் 1500 பதிவுகளுக்கு மேலே போட்டிருக்கிறார், அதோடு 700 பேரையும் பின்தொடர்கிறார். அப்படிப்பட்ட நிலையில் தான் இவர் சமீபத்தில் ஜியோ சினிமாவில் ஒரு நிகழ்ச்சியை நடத்தியிருந்தார். அது ரசிகர்களுக்கு கோபத்தை ஏற்படுத்துமாறு இருந்தது.
அதாவது சமீனா கடந்த ஏப்ரல் மாதம் 17ஆம் தேதி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார். அந்த வீடியோவில் ஆர்சிபி அணியின் கலாய்க்கும் படியாக இருந்ததாக நெட்டிசன்கள் குற்றம் சாட்டினார்கள். ஏனென்றால் அந்த வீடியோ கடந்த சில வருடங்களுக்கு முன்னர் சென்னை அணியை கலாய்க்கும் படியான ஒரு விடியோவை பதிவிட்டிருந்தனர். அது அதிக அளவு சோசியல் மீடியாவில் வைரலாகியது. பல மீம்ஸ் கிரிஃயேட்டர்ஸ் அதன் ஒரு டெம்ப்லேட்டாகவே மாற்றிவிட்டனர்.
View this post on Instagram
ஆனால் சமீனா தற்போது பதிவிட்டிருந்த அந்த வீடியோவில் கீழே “இது யாருடைய மனதையும் புண்படுத்துவதற்காக கிடையாது, ரசிப்பதற்காக மட்டுமே என்று பதிவிட்டிருந்தார். ஆனால் ரசிகர்கள் பலர் சமீனாவை கடிமையாக விமர்சனம் செய்தார்கள். சிலர் ஒரு செய்தியாளராக இருந்து இப்படி ஒரு பக்கத்திற்கும் மட்டுமே சப்போர்ட் செய்யலாமா என்று பதிவிட்டிருந்தார்கள். இந்நிலையில் அதற்கு பதிலடி கொடுத்த சமீனா கூறியது பின்வருமாறு.

இது சாதாரணம் ஒரு ரசிகரகளின் மகிச்சிக்காக செய்யப்பட்ட வீடியோ தான் அதை புரிந்து கொள்ளுங்கள். முதலில் நான் ஒரு செய்தியாளர் கிடையாது. நான் சென்னை அணியின் ரசிகை. நான் மற்ற அணிகளுக்கு ரசிகையாக இருந்தால் நானே சொல்லியிருப்பேன் . வெற்றியோ தோல்வியோ நான் மகிழ்ச்சியாக இருப்பேன். எனவே இதனை புரிந்து கொண்டு அவரவர் வேலையே பார்ப்போம் பதிவிட்டு பதிலடி கொடுத்திருந்தார்.





