இந்திய அணியானது வரும் ஆசிய போட்டியில் விளையாட இருக்கிறது. இந்த போட்டியில் இந்தியாவின் கேப்டனாக ருத்துராஜ் கெய்க்வாட் மற்றும் பல இளம் வீரர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ஐபிஎல் போட்டியில் ருத்திர தணடவம் ஆடிய ஜிதேஷ் சர்மாவும் இந்த அணியில் விக்கெட் கீப்பராக இருக்கிறார். இவர் தற்போது நடந்து வரும் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் தேர்வு செய்யப்படாமல் இருந்த நிலையில் இதற்கு தேர்வு செய்யபட்டுள்ளது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் தான் ஜிதேஷ் ஷர்மா தான் அணியில் இணைந்தது குறித்து பேசினார். அவர் கூறுகையில் “இந்தியாவில் உள்ள மிகச்சிறந்த விளையாட்டு வீரர்களுடன் இந்த தொடரில் பங்கேற்க போகிறோம் என்பதை நினைத்தும், மிகச்சிறந்த வீரர்களுடன் ஒன்றாக விளையாட போகிறோம் என்பதை நினைத்தும் பெருமையாக உள்ளது. எனக்கு தங்கமகன் நீரஜ் ரோல் மடல். அவரை நேரில் சந்திக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. இந்த வாய்ப்பின் மூலம் அவரை நான் நேரில் காண உள்ளேன்.
ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற அவரது சாதனை அவ்வளவு எளிதான யாராலும் செய்ய முடியாது. கிரிக்கெட் ஒரு குழு விளையாட்டு நம்மை சுற்றி எப்போதும் 10 பேர் இருப்பார்கள்.ஆனால் தனி நபராக விளையாடும் போட்டிகள் அப்படி கிடையாது. நாமாக தான் எந்த முடிவையும் எடுக்க வேண்டும். இப்போது இந்தியாவில் உள்ள பல்வேறு விளையாட்டு வீரர்களுடன் ஒன்றாக தங்கி நாட்களை கழிக்கப்போவதை நினைத்தால் பெருமையாக இருக்கிறது.

மற்ற விளையாட்டு வீரர்கள் எப்படி தயாராகிறார்கள் என்பதை காணவும் ஆவலாக காத்திருக்கிறேன். இந்த ஏசியன் கேம்ஸ் நிச்சயம் எனக்கு ஒரு புதிய அனுபவமாக இருக்கும். இந்திய அணிக்காக விளையாட இருப்பதை நினைத்தால் மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் உள்ளது. நான் தற்போது ஏசியன் கேம்ஸ் தொடருக்காக சரியான முறையில் பயிற்சியில் ஈடுபட்டு தயாராகி வருகிறேன் என்றும் ஜித்தேஷ் சர்மா கூறினார்.

மேலும் சூரிய குமார் யாதவ் பற்றி பேசிய அவர் கூறுகையில் “சூரியகுமார் யாதவின் ஆட்டத்தை பார்க்க நான் மிகவும் ஆவலாக இருக்கிறேன். அவர் அளவுக்கு நான் திறமை சாலி கிடையாது.ஆனால் அவரின் வீடியோ பதிவுகளை பார்த்து பீல்ட் செட் செய்த்ததற்கேட்ப எப்படி ஷாட்டுகளை அடிக்கிறார் என்பதை பார்த்து வருகிறேன். அவருடைய சில நுணுக்கங்களை கற்றுள்ளேன். ஒவ்வொருவருக்கும் ஒரு திறமை இருக்கும். என்னுடைய ஆட்டத்தை 360 டிகிரியில் விளையாட வேண்டும் என்று பயிற்சி செய்து வருவதாக கூறினார் ஜிதேஷ் சர்மா.





