
இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் 5 போட்டிகளை கொண்ட டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகின்றனர். அதில் முதல் மூன்று போட்டிகள் முடிவடைந்த நிலையில் 2 – 1 என்ற கணக்கில் இந்திய அணி முதலில் இருந்து வருகிறது. இன்று நாலாவது போட்டியானது ராஞ்சியில் இரு அணிகளும் விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து இருந்தது. அது ஆரம்பத்தில் அவர்களுக்கு சொதப்பலாக இருந்தாலும் அதன் பின் சிறப்பாக விளையாடி இருந்தனர்.
இன்றைய நாள் முடிவில் இங்கிலாந்து அணி 7 விக்கெட்டுகளை இழந்து 302 ரன்களை அடித்து இருந்தது. இதில் முதல் செஷனில் இந்திய அணியின் கைகள் ஓங்கி இருந்த நிலையில் உணவு இடைவேளைக்குப் பிறகு இங்கிலாந்து அணியின் வீரர் ரூட் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணிக்கு சவாலாக இருந்தார். இந்திய அணியின் அறிமுக வீரர் ஆகாஷ் தீப் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தனது திறமையை நிரூபித்து இருந்தார்.

இங்கிலாந்து அணியின் வீரர்களான பென் டக்கெட் 11 ரன்னிலும் போப் ரன் ஏதும் எடுக்காமலும் க்ராலி 42 ரன்னிலும் பேர்ஸ்டோ 38 ரன்னிலும் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 3 ரன்னிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். நிதானமாக விளையாடி கொண்டு இருந்த பென் போக்ஸ் அரை சதத்தை தவறவிட்டு 47 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார். ஹார்ட்லி 13 ரன்னிலும் ஆட்டமிழந்து வெளியேறினார். நாள் முடிவில் ஜோ ரூட் சதத்தை பூர்த்தி செய்த நிலையில் ஆட்டமிழக்காமல் இருந்து வருகிறார்.

மேலும் இந்திய அணியின் பந்து வீச்சாளர்கள் சிறப்பாகவே செயல் பட்டு இருந்தனர். இதில் குறிப்பாக அறிமுக வீரரான ஆகாஷ் தீப் 70 ரன்களை விட்டுகொடுத்து 3 விக்கெட்டுகளையும் முகமது சிராஜ் 60 ரன்களை விட்டுகொடுத்து 2 விக்கெட்டுகளையும் ஜடேஜா 55 ரன்களை விட்டுகொடுத்து 1 விகெட்டையும் அஷ்வின் 83 ரன்களை விட்டுகொடுத்து ஒரு விக்கெட்டையும் வீழ்த்தி இருந்தனர். எனவே இங்கிலாந்து அணி இன்றைய நாள் முடிவில் இங்கிலாந்து அணி 7 விக்கெட்டுகளை இழந்து 302 ரன்களை அடித்து இருந்தது. இந்த போட்டியில் அவர் சதத்தை பூர்த்தி செய்ததன் மூலம் இந்திய அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் அதிக சதம்(10) அடித்த வீரர் என்ற பெருமையும் பெற்றார்.





