அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த உலகக் கோப்பை 2023 தொடரானது இன்று அக்டோபர் மாதம் 5ஆம் தேதி இந்தியாவின் மிகவும் அழகான கிரிக்கெட் மைதானம் என்று கூறப்படும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைத்தனத்தில் தொடங்கியது. இந்த போட்டியானது மதியம் 2.30 மணிக்கு இங்கிலாந்துக்கு எதிராக நியூசிலாந்து அணியானது மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியானது பந்துவீசிய தேர்வு செய்தது.

இந்நிலையில் இங்கிலாந்து அணியின் துவக்க ஆட்டக்காரரான ஜானி பேர்ஸ்டோ 33 ரன்களில் ஆட்டமிழக்க டேவிட் மாலன் 14 ரன்கள் அவுட்டாக்கினார். பின்னர் ஹாரி ப்ரூக் 15 ரன்கள் ஆட்டமிழந்த நிலையில் அனுபவ வீரரான மொயின் அலி 11 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார். இதனால் தொடக்கத்திலேயே இங்கிலாந்து அணியானது சரிவை சந்தித்தது. இருந்த போதிலும் பொறுப்பாக விளையாடிய கேப்டன் ஜோஸ் பட்லர் 2 பவுண்டரி 2 சிக்சருடன் 43 (42) ரன்களில் ஆட்டமிழந்தார்.
மேலும் அதிரடி வீரரான லியாம் லிவிங்ஸ்டன் 20 ரன்களிலும் ஜோ ரூட் 77 ரன்களில் ஆட்டமிழக்க பின்னர் அந்த பேட்ஸ்மேன்கள் பெரிதும் எதுவும் செய்யாத நிலையில் இங்கிலாந்து அணியானது ஆழவுட்டிலிருந்து தன்னை காத்துகொண்டு 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 282 ரன்களை குவித்தது. இந்த போட்டியில் மாட் ஹென்றி 3 விக்கெட்டுகளும் மிச்சல் சாட்னர் மற்றும் கிளன் பிலிப்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தி நியூசிலாந்து அணிக்கு உதவினார்கள்.

இதனை தொடர்ந்து 283 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணியானது தொடக்கத்தில் சில தடுமாற்றங்களை சந்தித்தாலும் அதிரடியாக விளையாடிய டேவின் கான்வே மற்றும் ரச்சின் ரவீந்திரன் ஆகியோரின் ஆற்புதமான பேட்டிங்கின் மூலம் நியூசிலாந்து உலக கோப்பை 2023 போட்டியில் முதல் வெற்றியை பதிவு செய்தது. இந்நிலையில் இந்த மோசமான தோல்விக்கு பிறகு பேசிய இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் தோல்விக்கான காரணம் குறித்து பேசியிருந்தார்.
அவர் கூறுகையில் “ஏமாற்றமான நாள். இங்கிலாந்து கொடுத்த இந்த வெற்றியை ஏற்றுக்கொள்வது கடினமாகும். இருப்பினும் இந்த பெரிய தொடரில் இது வெறும் ஒரு தோல்வியாகும். இதற்கு முன் நாங்கள் இதே போல் தோற்கடிக்கப்பட்டு இதே போன்ற தோல்விகளை சந்தித்துள்ளோம். மேலும் நாங்கள் சராசரிக்கும் குறைவான ரன்களே எடுத்தோம். குறிப்பாக நாங்கள் 330 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற இலக்குடன் விளையாடினோம். அதற்கேற்றார் போல் சிறப்பாக இருந்த மைதானம் 2வது இன்னிங்ஸில் இன்னும் பேட்டிங்க்கு சாதகமாக மாறியது. ஆனால் நாங்கள் ஷாட்களை சரியாக அடிக்கவில்லை

நாங்கள் தொடர்ந்து எங்களது வழியில் விளையாட உள்ளோம். ஆனால் அதற்காக நாங்கள் மெதுவாகவும் சுமாரான ஷாட்களையும் அடித்து விளையாடக்கூடாது. அதே சமயம் நியூசிலாந்து அணி சிறப்பாக விளையாடினார்கள். குறிப்பாக கான்வே பெரிய ஷாட்களை அடிக்காமலேயே வேகமாக ரன்கள் சேர்த்தார். அவரைப் போலவே ரவீந்தராவும் விளையாடினார். அவர்களுடைய பார்ட்னர்ஷிப் எங்களை தோற்கடித்து விட்டது. குறிப்பாக இரவு நேரத்தில் பந்து பேட்டுக்கு அதிகமாக வழுக்கி கொண்டு நன்றாக வந்தது என்று கூறினார்.



