கிரிக்கெட்டில் எது சுவாரசியமான போட்டி என்றால் அனைவருக்கும் முதலில் நியாபகம் வருவது இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டி தான். கஏனெனில் அண்டை நாடுகளான இவ்விரு அணிகளும் கிரிக்கெட்டை விளையாட்டாக பார்க்காமல் அதை கௌரவமாக கருதி ஆக்ரோசத்துடன் முழு திறமையை வெளிப்படுத்தி நேருக்கு நேர் மோதிக் கொள்வார்கள் என்பதாலேயே இந்தியா vs பாகிஸ்தான் போட்டிகள் உலகப்புகழ் பெற்றதாக இருக்கிறது.

இந்நிலையில் உலக கோப்பை 2023 போட்டியானது வரும் ஆக்டோபர் மாதம் தொடங்க இருக்கிறது. மேலும் இந்த தொடரானது முழுமையாக இந்தியாவிலேயே நடைபெறுவதில் இந்தியாவிற்கு இது சாதகமாகவும், அதே நேரத்தில் வெற்றியடைத்தே ஆகவேண்டும் என்ற அழுத்தமும் இருக்கிறது. இந்நிலையில் ஆசிய போட்டியில் விளையாடும் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் இந்த தொடருக்கு முன்பாக மூன்று ஒரு ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது.
இந்நிலையில் இந்த தொடரில் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியானது 201ரன்களுக்கு ஆல் அவுட்டகினாலும் அற்புதமாக பந்துவீசி பின்னர் ஆப்கானிஸ்தான் அணியை 59 ரன்களுக்குள் சுருட்டி 142 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்தது. இதனை தொடர்ந்து இரண்டவது ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணியானது 300 ரன்களை குவித்து அற்புதமாக விளையாடியது. இருந்த போதிலும் பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சளர்கள் அற்புதமாக விளையாடி 1 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்கள்.

இதனால் பாகிஸ்தான் அணியானது தொடரில் வென்றது. இதை தொடர்ந்து மூன்றவது போட்டியில் பாகிஸ்தான் அணி அற்புதமாக விளையாடி வெற்றி பெற்றது. ஆனால் இந்த தொடரில் இரண்டாவது போட்டியில் பாகிஸ்தான் அணியானது 9 விக்கெட்டுகளை இழந்து நூலிழையில் வெற்றி பெற்றது. இப்படிப்பட்ட நிலையில் தான் இந்த தொடரில் பாகிஸ்தான் அணியின் செயல்பாடு சரியில்லை என்று கூறியுள்ளார் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் கம்ரன் அக்மல்.

அவர் கூறுகையில் “நவீன கிரிக்கெட்டில், ஒவ்வொரு பேட்ஸ்மேனும் நேர்மறையாக விளையாட வேண்டும். ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக 300 ரன்கள் எடுக்க முடியாவிட்டால், ஆசிய கோப்பையில் இந்தியாவை எதிர்கொள்ளும்போது அதைச் செய்ய முடியுமா? அது மிகவும் கடினமாக உள்ளது. இந்த போட்டி ஒரு நல்ல பயிற்சி வாய்ப்பாக இருக்கும். பாகிஸ்தான் அணி, முதலில் பேட் செய்து பெரிய ஸ்கோரை எடுக்க இரண்டு ஆட்டங்களில் எங்களுக்கு வாய்ப்பு கிடைத்தது.

இந்த வாய்ப்புகளில் சரியாக பாகிஸ்தான் பேட்டர்கள் அதிக பொறுப்பை வெளிப்படுத்தியிருக்க வேண்டும். நீங்கள் இரண்டாவது ஆட்டத்தில் 300 ரன்கள் எடுத்தீர்கள். ஆனால் பேட்டர்ஸ் ஆட்டத்தை முடித்திருக்க வேண்டும். ஆனால் லோயர்-ஆர்டரில் வரும் பேட்ஸ்மேன்கள் தான் உங்களுக்காக ரன்-சேஸை முடித்தனர். இது பாகிஸ்தான் அணிக்கு நல்ல அறிகுறி கிடையாது என்று கூறியிருக்கிறார் கம்ரன் அக்மல்.



