அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் உலக கோப்பை 2023 போட்டியானது வரும் ஆக்டோபர் மாதம் தொடங்க இருக்கிறது. இந்த போட்டியானது முழுக்க முழுக்க இந்தியாவில் நடப்பதினால் 10 வருடங்கள் கழித்து மீண்டும் இந்திய அணிக்கு ஐசிசி போட்டியில் வெற்றிபெற வாய்ப்பு கிடைத்து மட்டுமல்லாமல் சொந்த மண்ணில் வெற்றி பெறவேண்டும் என்ற அழுத்தமும் ஏற்பட்டுள்ளது. இதனால் இந்திய அணியின் மீது பல எதிர்பார்ப்புகளை ரசிகர்கள் வைத்துள்ளனர்.

கபில் தேவ் பேட்டி :
இந்த நிலையில் தான் கர்நாடகா மாநிலத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், ஜாமணவானுமாகிய கபில் தேவ் உலக கோப்பை குறித்து பேசியுள்ளார். அவர் கூறியதாவது “இந்த போட்டியானது எப்படி முடிவடையும் என்று எனக்குத் தெரியவில்லை. உலகக் கோப்பைக்கான அணியை இந்தியா இன்னும் அறிவிக்கவில்லை. இந்திய அணி எப்போதுமே தங்களுக்கு ஒரு பிடித்தமான சூழ்நிலையிலேயே உலக கோப்பையில் களமிறங்கும் என்றார் கபில் தேவ்.
மேலும் பேசிய அவர் கூறுகையில் “இந்த விஷியத்தில் இந்தியா எப்படி அனைவரது எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்கிறது என்பதில் இருக்கிறது. நாம் நம்முடைய மண்ணில் உலக கோப்பையை வென்றிருக்கிறோம். இந்திய அணியில் யாரை மீண்டும் தேர்வு செய்தலும் நாம் மீணடும் வெற்றிபெறுவோம் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. உலக கோப்பை 4வருடங்களுக்கு ஒருமுறை தான் வருகிறது. எனவே வீரர்கள் தயாராக இருப்பார்கள் என்று தான் நம்புவதாக தெரிவித்தார் கபில் தேவ்.

கபில் தேவ் அறிவுரை :
அதோடு இந்திய அணி உலக கோப்பைக்கு தயாராவது குறித்து சில அறிவுரைகளையும் கூறிய அவர் “நான் கிரிக்கெட் விளையாடிய காலம் வேறு. அப்போதெல்லாம் அதிக கிரிக்கெட்டை விளையாட மாட்டோம். ஆனால் இப்போது காலம் மாறி வருடத்தில் 10 மாதங்கள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுகின்றனர். இதில் நான் சொல்ல வருவது என்னவென்றால் உங்களுடைய உடற் தகுதியின் மீது கவனம் செலுத்துங்கள்.

முடிந்த அளவிற்கு காயங்கள் ஏற்படுப்பதிலிருந்து தள்ளி இருங்கள். அனைவரது உடலும் வேறு வேறுமாதிரியான தன்மை கொண்டது. எனவே உங்களுடைய உடற் தகுதியை கவனித்து கொள்வதில் அக்கறை காட்டுங்கள் என்றார் கபில் தேவ். இந்திய அணியின் தற்போதைய நிலமையை பார்க்கும் போது இவர் சொல்வது ஒரு விதத்தில் நியாயம் தான். ஏனென்றால் இந்தியாவின் முக்கிய வீரர்களான பும்ரா, கேஎல் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட் போன்றவர்கள் காயம் காரணமாக விலகி இருகின்ற்றனர்.
மேலும் அவர்கள் தற்போது குணமடைந்து வந்தாலும் உலக கோப்பையில் பங்குபெறுவது என்பது சந்தேகமான ஒன்றுதான். அதே போல ரிஷப் பண்ட், பும்ரா, கேஎல் ராகுல் அணியில் இல்லாததை நாம் சமீபத்தில் நடந்து முடிந்த உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் போட்டியிலேயே பார்த்தோம். இந்நிலையில் ஒரு வேளை தற்போது இந்தியாவிற்காக விளையாடிவரும் வீரர்களுக்கும் காயம் ஏற்பாட்டால் இந்திய அணிக்கு அது மிகப்பெரிய பின்னடைவாக இருக்கும் என்பதில் சந்தேகமே கிடையாது.



