ஐபிஎல் 2023ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி தொடங்கி பிரமாதமாக நடந்து வருகிறது. இந்நிலையில் இன்று 9வது லீக் ஆட்டம் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இரு பலம் வாய்ந்த அணிகள் மோதும் போட்டி நடைபெறுகிறது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் இப்போட்டியில், முதலில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் பந்துவீச தீர்மானித்தது.

தொடக்கத்தில் ஆர்சிபியின் அருமையான பந்துவீசினால் திணறிய கொல்கத்தா அணிக்கு மூன்றாவது ஓவரிலேயே தொடக்க ஆட்டக்காரர் வெங்கடேஷ் ஐயரின் விக்கெட் விழுந்தது. அந்த விக்கெட்டுக்கு பிறகே அடுத்த பந்தில் மன்தீப் சிங் ஆட்டமிழந்தார். இதனால் கொல்கத்தா அணிக்கு அதிர்ச்சியாக இருந்தது. அதனை தொடர்ந்து களமிறங்கிய கொல்கத்தா அணி கேப்டன் நிதிஷ் ராணா தன்னுடைய விக்கெட்டை இழந்தார்.
இப்படி வெறும் 6 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்த கொல்கத்தா அணிக்கு அதிர்ச்சிக்கு மேலே அதிர்ச்சியாக சிக்ஸர் நாயகன் ஆன்ட்ரே ரசலும் தன்னுடைய ஆட்டத்தை இழந்தார். இப்படி பல நட்சத்திர வீரர்கள் ஆட்டமிழந்த நிலையில் நம்பிக்கை நாயகனாக வந்தவர் தான் ஷர்துல் தாக்கூர். இவர் ஆன்ட்ரே ரசலுக்கு இணையாக அதிரடியாக விளையாடி வெறும் 20பந்துகளில் 51 ரன்கள் எடுத்து கலக்கினார். அதனை தொடர்ந்து அதிரடியாக ஆடிய ஷர்துல் தாக்கூர் 29 பந்துகளில் 68 ரன்கள் எடுத்தார்.

இந்நிலையில் 205 ரன்கள் என்ற பெரிய இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு அணிக்கு சிறப்பான தொடக்கம் கிடைக்கவில்லை. 4 ஓவர்களில் 44 ரன்களுக்கு கொண்டு வந்த கோலி மற்றும் டு பிளேஸிஸ் ஜோடிக்கு பிறகு தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்து அணியை சிக்கலில் ஆழ்த்தியது. கோலி, நரேன், ஃபாஃப், வருண் ஆகியோர் தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்தனர். அவர்களை போலவே ஆல்-ரவுண்டர் மேக்ஸ்வெல் 5 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

மேலும் ஆல்-ரவுண்டர் ஷாபாஸ் நதீமும் 1 ரன் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். பிரேஸ்வெல் சிறிது நேரம் போராடினார், ஆனால் அவரும் வெறும் 19 ரன்கள் எடுத்து அணியை ஆட்டமிழக்கச் செய்தார். அனுஜ் ராவத் 8-வது இடத்தில் பேட்டிங் செய்ய வந்து 1 ரன் மட்டுமே எடுத்து அவுட் ஆனார். இறுதியில் பெங்களூரு அணி 17.4 ஓவர்கள் முடிவில் மொத்த விக்கெட்டுகளையும் இழந்து 123ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது.





