நான் விருப்பபட்டு தான் அவருக்கு ஸ்ட்ரைக் கொடுத்தேன். விராட் கோலி கூறித்து மனம் திறந்த கே.எல்.ராகுல். உலக ரசிகர்கள் அனைவரும் காத்திருந்த ஒருநாள் உலக கோப்பை 2023 தொடரானது தற்போது கோலாகலமாக நடந்து வருகிறது. இந்த போட்டியில் ஏற்கனவே பல அணிகள் 3 போட்டிகளை விளையாடிய நிலையில் அவர்களின் பலம் எனது பலவீனம் எனது என்பது குறித்து நன்றாக தெரிந்து வைத்திருக்கின்றனர். இந்நிலையில் இந்த உலக கோப்பையில் தொடர்ந்து மூன்று முறை வென்ற இந்திய அணியானது நேற்று பங்களாதேஷ் அணியை எதிர்கொண்டது.

இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற பங்களாதேஷ் அணியானது பேட்டிங் செய்ய தேர்வு செய்தது. ஆனால் இந்த போட்டியில் கேப்டன் சகீப் அல் ஹாசன் இல்லை. மேலும் கடந்த சில போட்டிளில் பங்களாதேஷ் அணியானது கொஞ்சம் தடுமாறி வருகிறது. சொல்லப்போனால் முதல் போட்டியை தவிர பங்களாதேஷ் அணியானது 2 போட்டிகளிலும் தோல்வியை தழுவியுள்ளது. இதனால் இந்த போட்டியை வென்றே ஆகவேண்டிய கட்டாயத்தில் பங்களாதேஷ் அணி இருக்கிறது.
இந்நிலையில் முதல் பேட்டிங் செய்த பங்களாதேஷ் அணி தொடக்கத்தில் கொஞ்சம் தடுமாறினாலும், பின்னர் அதிரடியாக விளையாட ஆரம்பித்தனர். பங்களாதேஷ் அதிகபட்சமாக ரிட்டன் தாஸ் 66 ரன்களும், ஹாசன் 51 ரன்களும், மஹ்மத்துல்லா 46 ரன்களும் எடுத்தனர் இறுதியில் பங்களாதேஷ் அணி எட்டு விக்கெட்டுகளை இழந்து 256 ரன்களை குவித்தது. இந்திய அணியின் சார்பில் பும்ரா, சிராஜ், ரவீந்திர ஜடேஜா தலா இரண்டு விக்கெட்களையும் தாகூர்,குல்தீப் யாதவ் தலா ஒரு விக்கெட்டுகளையும் விழித்தனர்.

இந்த ஸ்கோர் இந்தியா அணிக்கு சற்று சவாலான ஸ்கோராக தான் இருக்கின்றது.257 ரன்களை இலக்காகக் கொண்டு களம் இறங்கிய இந்திய அணி ஆரம்பத்தில் நல்ல தொடக்கத்தை கொடுத்து 4 ஓவர்களுக்கு விக்கெட் இழப்பின்றி 28 ரன்களை குவித்துள்ளது. இறுதியில் இந்திய விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணியின் சார்பில் அதிக பட்சமாக கோலி 103 ரன்களும்,கில் 53 ரன்களும், ரோஹித் ஷர்மா 48 ரன்களும் குவித்தனர்.
விராட் கோலி சிக்சரின் மூலம் இந்திய அணி வெற்றியை கண்டது. விராட் கோலியின் சதத்திற்கு கே.எல்.ராகுலின் பங்கும் அதில் இருந்தது. விராட் கோலியை ரசிகர்கள் அவரை பலரும் விமர்சித்தனர். கோலி தன்னுடைய சுயநலத்திற்காக விளையாடுகிறார். அணிக்காக விளையாடவில்லை என்றும் கே.எல்.ராகுலை அவர் கட்டாயப்படுத்தி தேவையான போது மட்டும் ஒரு ரன்னை ஓட வைத்தார் என்ற விமர்சனமும் எழுந்துள்ளது. இது குறித்து கே.எல்.ராகுல் விளக்கம் ஒன்றையும் அளித்துள்ளார்.

கே.எல்.ராகுல் கூறியது:
நான் தான் அவரை கட்டாயப்படுத்தி ஒரு ரன்களை ஓட வைத்தேன். அவருக்கு 3௦ ரன்கள் தேவைப்பட்ட போது நான் விருப்பபட்டு தான் கோலிக்கு ஸ்ட்ரைக் கொடுத்தேன். நீங்கள் பெரிய ஷாட்டிற்கு செல்லுங்கள் என்றும் நான் அவரிடம் கூறினேன். நான் ஸ்ட்ரைக் வரும் போது எல்லாம் நான் பந்தை பிளாக் செய்தேன். என்றும் வதந்திகளுக்கு விளக்கமும் அளித்தார்.



