இந்தியன் பிரீமியர் லீக்கில் லீக்கின் 38வது ஆட்டத்தில் இன்று பஞ்சாப் கிங்ஸ் அணியும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் மோதியது. இதில் லக்னோ அணி 56 ரன்கள் வித்தியாசத்தில் அபார வென்றி பெற்றது. அதோடு ஐபிஎல் சீசனில் அதிக ரன்கள் 257 குவித்த இரண்டாவது அணி என்ற பெருமையை லக்னோ அணி பெற்றது. முதலில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பௌலிங்கை தேர்வு செய்தது.

அதன் படி முதலில் களமேரங்கிய லக்னோ அணி ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடி ரன்களை குவிக்க ஆரம்பித்தனர். கே.எல். ராகுல் 12 ரன்களில் வெளியேறினார், இருப்பினும் மற்றொரு பக்கம் மேயர்ஸ் அதிரடி பாணியை விடாமல் விளையாடி அரை சதத்தை பூர்த்தி செய்ய, 54 ரன்களில் ஆட்டமிழந்தார். 9 வது ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 111 குவித்து இருந்தனர். பதோனி 24 பந்துகளில் 43 ரன்களை குவித்த நிலையில் விக்கெட்டை பறிகொடுத்து வெளியேற
பஞ்சாப் அணி பேட்டிங் :
அதன் பின் பூரான் தனது பங்கிற்கு பஞ்சாப் அணியை சிதறடித்தார். 15.5 ஓவர்களிலே 200 ரன்களை குவித்து அதிரடி ஆட்டத்தை காட்டி வந்தனர். பஞ்சாப் அணியின் கேப்டன் ஷிகர் தவானுக்கு என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வந்தார். பஞ்சாப் அணியின் பௌலர்கள் என்ன செய்யதென்று தெரியாமல் திணறி வந்தனர். ஸ்டானிஸ் 72 ரன்களை குவித்து வெளியேற, அதன் பின் பூரான் 45 ரன்களை குவித்த நிலையில் வெளியேறினார், இறுதியில் 20 ஓவர்களில் 257 ரன்களை குவித்து வந்தது லக்னோ அணி.

தோல்வி :
258 என்ற இமாலய இலக்குடன் களம் கண்ட பஞ்சாப் அணிக்கு ஆரம்பமே சோதனையாக அமைய ஒரு புறம் நிதானமாக விளையாடிய அதர்வா 66 ரன்களை அடித்த நிலையில் விக்கெட்டை இழந்த வெளியேற பஞ்சாப் அணி தோல்வியை நோக்கி நகர்ந்து சென்றது.அதன் பின் வந்த லிவிங்க்ஸ்டனும் ஜொலிக்க முடியாமல் வெளியேறினார் இறுதியில் 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த நிலையில் 201 ரன்களை மட்டுமே அடித்தது. லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி 56 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

கேஎல் ராகுல் கூறியது :
இந்த போட்டி டி20 போக்குக்கு எதிரானது. வெற்றி பெற்றதில் மகிழ்ச்சியடைகிறேன். இனிமேல் ஒவ்வொரு ஆட்டமும் மிக முக்கியமானதாக இருக்கும். கடைசி ஆட்டத்திற்குப் பிறகு எங்களுக்கு ஓய்வு கிடைத்தது. அதன் பிறகு புத்துணர்ச்சியுடனும், தெளிவாகவும் வந்தோம். எப்படி பேட்டிங் செய்ய வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தோம். இதுபோன்ற விக்கெட்டுகளைப் பார்க்கும் போது ஒரு பேட்ஸ்மேண்ணாக மகிழ்ச்சியாக இருக்கும். 250ரன்களை பெறுவது என்பது நாங்கள் எப்படி பேட்டிங் செய்தோம் என்பதைப் பற்றி புரியவைக்கும்.
— Ninja (@IPLcskMSD) April 29, 2023
எங்களின் விக்கெட்டை நாங்கள் நன்றாக அறிந்து வைத்திருந்தது வெற்றி பெறுவதற்கு உதவியாக இருந்தது. ஒரு நல்ல ஆட்டத்தை தொடக்கத்தில் தரவேண்டும் என்று எப்போதுமே நாங்கள் யோசித்ததுண்டு. எங்களிடம் மேயர்ஸ், ஸ்டோனிஸ் போன்ற பேட்ஸ்மேன்கள் சிறப்பாக பேட்டிங் செய்தார்கள். பயிற்சியாளர்கள் என்ன யோசிக்கிறார்கள் என்பதை பற்றி புரிந்து கொள்ள நான் முயற்சி செய்கிறேன். அந்த திட்டம் பொருத்தமானதாக இருந்தால் அதனை செயல்படுத்துகிறேன் என்றார் கேஎல் ராகுல்





