உலக ரசிகர்கள் அனைவரும் காத்திருந்த ஒருநாள் உலக கோப்பை 2023 தொடரானது தற்போது கோலாகலமாக நடந்து வருகிறது. இந்த போட்டியில் ஏற்கனவே பல அணிகள் 3 போட்டிகளை விளையாடிய நிலையில் அவர்களின் பலம் எனது பலவீனம் எனது என்பது குறித்து நன்றாக தெரிந்து வைத்திருக்கின்றனர். இந்நிலையில் இந்த உலக கோப்பையில் தொடர்ந்து மூன்று முறை வென்ற இந்திய அணியானது இன்று பங்களாதேஷ் அணியை எதிர்கொள்கிறது.

இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற பங்களாதேஷ் அணியானது பேட்டிங் செய்ய தேர்வு செய்தது. ஆனால் இந்த போட்டியில் கேப்டன் சகீப் அல் ஹாசன் இல்லை. மேலும் கடந்த சில போட்டிளில் பங்களாதேஷ் அணியானது கொஞ்சம் தடுமாறி வருகிறது. சொல்லப்போனால். முதல் போட்டியை தவிர பங்களாதேஷ் அணியானது 2 போட்டிகளிலும் தோல்வியை தழுவியுள்ளது. இதனால் இந்த போட்டியை வென்றே ஆகவேண்டிய கட்டாயத்தில் பங்களாதேஷ் அணி இருக்கிறது.
இந்நிலையில் முதல் பேட்டிங் செய்த பங்களாதேஷ் அணி தொடக்கத்தில் கொஞ்சம் தடுமாறினாலும், பின்னர் அதிரடியாக விளையாட ஆரம்பித்தனர். இந்நிலையில் இந்த போட்டியில் 25 வது ஓவரின் போது சிராஜ் பந்துவீச பங்களாதேஷ் அணியின் வீரர் ஹசன் மிராஸ் களத்தில் நின்று கொண்டிருக்க சிராஜ் ஒய்டு சைடில் பந்துஎவீச அதனை அடிக்க முயற்சி செய்த ஹசன் மிராஸ் அதனை தொட்டு விட கேஎல் ராகுல் அந்த பந்தை அற்புதமாக பிடித்து விக்கெட்டை வீழ்த்தினார்.
Appreciation Tweet for KL Rahul. 👏
— Immy|| 🇮🇳 (@TotallyImro45) October 19, 2023
What a great catch. 🙌
Don't miss the running celebration from Captain Rohit Sharma in the end 🔥 #INDvsBAN pic.twitter.com/it3mKoPUDL
அதன் மூலம் முக்கிய விக்கெட்டை வீழ்த்தினார். மேலும் இந்த கேட்சை பலரும் பாராட்டி வருகின்றனர். ஏனென்றால் இந்த கேட்சுகளை பொதுவாக விக்கெட் கீப்பர்களுக்கு தெரியாத இடம் என்பதினால் தவிர விடுவார்கள். ஆனால் கேஎல் ராகுல் அதனை கணித்து முன்னரே சென்று கேட்சை பிடித்தார்.
மேலும் கேஎல் ராகுல் ஐபிஎல் போட்டியின் போது காயம் காரணமாக வெளியேறிய போது பலரும் கடுமையாக விமர்சித்தனர். சொல்லப்போனால் பலர் கேஎல் ராகுல் இல்லாதது நல்லது என்று கூறி வந்தனர். ஆனால் ஆசிய கோப்பை போட்டியிலும், உலக கோப்பை போட்டியிலும் தன்னால் சிறப்பாக பேட்டிங் மட்டுமல்ல விக்கெட் கீப்பிங்கும் செய்ய முடியும் என்று காட்டியுள்ளார் கேஎல் ராகுல்.




