நாளை மறுநாள் தொடங்க உள்ள ஐந்து ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்தை எதிர்கொள்ள இந்திய அணி தயாராக உள்ளது. இரு அணிகளும் ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் முதல் போட்டியை இரு அணிகளும் விளையாட உள்ளது.இதில் இந்திய அணிக்கு அடுத்ததடுத்து பயத்தை ஏற்படுத்தும் செய்திகள் வந்த வண்ணமே உள்ளது. அதில் முக்கியமான ஒன்று விராட் கோலி முதல் இரண்டு டெஸ்ட் போட்டியில் இருந்தும் அவர் வெளியேறியுள்ளார்.

மேலும் ராகுல் டிராவிட் ஒரு அறிவிப்பு ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கே.எல்.ராகுல் விக்கெட் கீப்பிங் செய்ய மாட்டார் என்றும் அவர் கூறி இருந்தார். கே.எல்.ராகுல், கே.எஸ்.பாரத் மற்றும் துருவ் ஜூரல் உள்ளிட்ட அணியில் உள்ளனர். இந்த மூன்று பெரும் விக்கெட் கீப்பிங் செய்யக் கூடிய வீரர்கள் தான்.இவர்களில் யார் இங்கிலாந்துக்கு எதிராக இந்தியாவுக்கு யார் கையுறைகளை அணிவார்கள் என்பது குறித்து பல கேள்விகள் தற்போது எழுந்துள்ளது.

அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் சில விஷயங்களை பற்றி அவர் கூறி இருந்தார். இது குறித்து அவர் கூறுகையில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக விக்கெட் கீப்பிங்கை ராகுல் சிறப்பாகச் செய்தார் என்று கருத்து தெரிவித்த அவர், இங்கிலாந்துக்கு எதிரான அணிக்காக கையுறைகளை அணிய மாட்டார். மேலும் தேர்ந்தெடுத்த மற்ற இரண்டு விருப்பங்களுக்கு இடையில் தேர்வு இருக்கும் என்று அவர் கருத்து தெரிவித்தார்.

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் நிபந்தனைகள் மற்றும் கால அளவைக் கருத்தில் கொண்டு கேஎல் ராகுல் விக்கெட் கீப்பராக விளையாட மாட்டார். நாங்கள் மற்ற இரண்டு விக்கெட் கீப்பர்களைத் தேர்ந்தெடுத்துள்ளோம், தென்னாப்பிரிக்காவில் ராகுல் எங்களுக்காக ஒரு அற்புதமான வேலையைச் செய்தார், மேலும் தொடரை சமன் செய்ய எங்களுக்கு உதவுவதில் பெரும் பங்கு வகித்தார். ஆனால் ஐந்து டெஸ்ட் போட்டிகள் (இங்கிலாந்துக்கு எதிராக) மற்றும் இந்த நிலைமைகளில் விளையாடுவதைக் கருத்தில் கொண்டு, எங்களிடம் உள்ள மற்ற இரண்டு கீப்பர்களுக்கு இடையே தேர்வு இருக்கும்” என்று டிராவிட் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.





