இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் கே.எல்.ராகுல் பிடித்த கேட்சை தோனியுடன் ஒப்பிட்டு ரசிகர்கள் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். உலக ரசிகர்கள் அனைவரும் காத்திருந்த ஒருநாள் உலக கோப்பை 2023 தொடரானது தற்போது கோலாகலமாக நடந்து வருகிறது. இந்த போட்டியில் ஏற்கனவே பல அணிகள் 3 போட்டிகளை விளையாடிய நிலையில் அவர்களின் பலம் எனது பலவீனம் எனது என்பது குறித்து நன்றாக தெரிந்து வைத்திருக்கின்றனர். இந்நிலையில் இந்த உலக கோப்பையில் தொடர்ந்து மூன்று முறை வென்ற இந்திய அணியானது நேற்று பங்களாதேஷ் அணியை எதிர்கொண்டது.

இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற பங்களாதேஷ் அணியானது பேட்டிங் செய்ய தேர்வு செய்தது. ஆனால் இந்த போட்டியில் கேப்டன் சகீப் அல் ஹாசன் இல்லை. மேலும் கடந்த சில போட்டிளில் பங்களாதேஷ் அணியானது கொஞ்சம் தடுமாறி வருகிறது. சொல்லப்போனால். முதல் போட்டியை தவிர பங்களாதேஷ் அணியானது 2 போட்டிகளிலும் தோல்வியை தழுவியுள்ளது. இதனால் இந்த போட்டியை வென்றே ஆகவேண்டிய கட்டாயத்தில் பங்களாதேஷ் அணி இருக்கிறது.
இந்நிலையில் முதல் பேட்டிங் செய்த பங்களாதேஷ் அணி தொடக்கத்தில் கொஞ்சம் தடுமாறினாலும், பின்னர் அதிரடியாக விளையாட ஆரம்பித்தனர். இந்நிலையில் இந்த போட்டியில் 25 வது ஓவரின் போது சிராஜ் பந்துவீச பங்களாதேஷ் அணியின் வீரர் ஹசன் மிராஸ் களத்தில் நின்று கொண்டிருக்க சிராஜ் ஒய்டு சைடில் பந்துஎவீச அதனை அடிக்க முயற்சி செய்த ஹசன் மிராஸ் அதனை தொட்டு விட கேஎல் ராகுல் அந்த பந்தை அற்புதமாக பிடித்து விக்கெட்டை வீழ்த்தினார்.
MS Dhoni was never this good with the gloves to be very honest
— Aarav (@sigma__male_) October 19, 2023
What a catch by KL Rahul 🔥#indiavsbangladesh pic.twitter.com/zvPAaYZ94X
அதன் மூலம் முக்கிய விக்கெட்டை வீழ்த்தினார். மேலும் இந்த கேட்சை பலரும் பாராட்டி வருகின்றனர். ஏனென்றால் இந்த கேட்சுகளை பொதுவாக விக்கெட் கீப்பர்களுக்கு தெரியாத இடம் என்பதினால் தவிர விடுவார்கள். ஆனால் கேஎல் ராகுல் அதனை கணித்து முன்னரே சென்று கேட்சை பிடித்தார். இது குறித்து கே.எல்.ராகுலின் ரசிகர்கள் தோனியை கிண்டல் செய்யும் வகையில் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
தோனி vs கே.எல்.ராகுல்
அதில் ஒரு ரசிகர் உண்மையாக சொல்லவேண்டுமானால் தோனி இவ்வளவு சிறப்பாக பந்தை பிடித்து இருக்க மாட்டார் என்று கே.எல்.ராகுலின் ரசிகர்கள் தோனியை வம்பிற்கு இழுத்தனர். கே.எல்.ராகுலின் ரியாக்ஷன் டைம் வெறும் 0.78வினாடிகள் மட்டுமே என்றும் கேஎல் ராகுலை புகழ்ந்து இருந்தனர். மேலும் தோனியும் ஒரு லெஜன்ட் என்றும் கே.எல் ராகுல் அவருடைய பழைய ஆட்டத்திற்கு வந்து விட்டார் என்றும் புகழ்ந்து இருந்தனர்.
Superman Catches in World Cup:
— Johns (@JohnyBravo183) October 19, 2023
KL Rahul 2023 🤝 MS Dhoni 2019#INDvsBAN | #CWC23 pic.twitter.com/U5MQ5UYTdc
தோனி ஸ்டெம்ப்க்கு பின்னல் இருந்து புரட்சியை ஏற்படுத்த கூடியவர். கே.எல்.ராகுலின் அபாரமான கேட்ச் போன்ற அசாதாரண தருணங்கள் விளையாட்டை உண்மையிலேயே மறக்க முடியாததாக ஆக்குகிறது. இந்த தருணங்கள் கொண்டாடப்பட வேண்டியவை, தேவையற்ற சர்ச்சைகளுக்கு பின்னணியாக பயன்படுத்தப்படவில்லை என்றும் பலர் கருத்துகளை கூறி வருகின்றனர்.



