இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மாவும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட்கோலியும் 2022 t20 உலகக்கோப்பைக்கு பின்னதாக எந்த ஒரு டி20 போட்டியை விளையாடவில்லை. அவர்கள் இந்த வருடம் நடைபெறும் உலகக்கோப்பை போட்டியில் கலந்து கொள்வார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த வருடம் நடைபெறும் உலகக்கோப்பையில் 20 அணிகள் கலந்துகொள்ள உள்ளது. இந்திய அணி இந்த உலகக்கோப்பை வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் இருந்து வருகிறது.

நடந்து முடிந்த உலகக்கோப்பையில் விராட் கோலி தான் அதிக ரன்களை அடித்துள்ளார். அதற்க்கு அடுத்த படியாக ரோஹித் ஷர்மா இரண்டாவது இடத்தில் இருந்துள்ளார். விராட் கோலி 765 ரோஹித் ஷர்மா 597 ரன்களும் அடித்துள்ளனர். அவர்கள் பேட்டிங்கில் சிறந்த பார்மில் இருந்து வருகின்றனர். 2022 உலகக்கோப்பைக்கு பின்னதாக ரோஹித் ஷர்மா t20 போட்டியில் விளையாடத நிலையில் ஹர்திக் பாண்டியா தான் இந்திய அணியின் கேப்டனாக இருந்து வந்தார்.
இந்த வருடம் ஜூன் மாதம் உலகக்கோப்பையானது தொடங்கவுள்ளது. அது குறித்து தான் தற்போது விவாதம் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வரும் உலகக்கோப்பையில் அவர் தான் கேப்டன்சி செய்வார் என்றும் ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி இந்திய அணியில் இருக்க மாட்டார்கள் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்திய அணியில் விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா கட்டயாம் அணியில் உலகக்கோப்பை 2024 டி20 போட்டியில் விளையாட வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் மேலும் அவர் கூறுகையில்,

“விராட் கோலி உறுதியாக இருக்கிறார். அவர் சிறந்த ஃபார்மில் இருக்கிறார். ரோஹித் சர்மா, உலகக் கோப்பையில் அவர் எப்படி சதம் அடித்தார் என்பதற்காக நம்பிக்கையுடன் இருக்கலாம். அவர் மீண்டும் ஒருங்கிணைத்து ஐபிஎல்லில் சிறப்பாக விளையாடுவார். ரோஹித் சர்மா கூறினால், நான் தயாராக இருக்கிறேன். நீங்கள் அவரை கைவிடுவீர்கள் என்று சொல்ல முடியாது.
நாள் முடிவில், ரோஹித் சர்மாவும் உலகக் கோப்பையை இழந்ததால் வேதனையடைந்தார்.

குறைந்த பட்சம் உலகக் கோப்பையை கையில் வைத்துக் கொண்டு வெளியே செல்ல விரும்புவார். 2007 உலகக் கோப்பையில் அவர் இருந்தார். அவர் இதேபோன்ற ஒன்றைச் செய்ய விரும்புவார், உலகக் கோப்பையை வென்று வெளியேற வேண்டும் என்று அவர் கூறியிருந்தார். மேலும் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான t20 போட்டிக்கு இந்திய அணியை BCCI அறிவித்து இருந்தது. அதில் விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா 14 மாதங்களுக்கு பிறகு அணியில் இணைந்து உள்ளார். அதில் ரோஹித் ஷர்மா கேப்டனாக செயல்பட உள்ளார்.




