சொல்லப்போனால் ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்களை ஒரு இன்னிங்கில் எதிரணிக்கு விட்டுக்கொடுத்து ஆர்சிபி. இதற்கு முக்கியமான காரணமாக பார்க்கப்படுவது அவர்களின் பந்துவீச்சுதான். என்னதான் பேட்டிங்கில் பலமாக இருந்தாலும் பவுலிங்கில் சொதப்புகிறது ஆர்சிபி. இந்த நிலையில் RCBயின் பந்துவீச்சு குறித்து கடுமையாக விமர்சித்தும், விராட் கோலியை பந்துவீச சொல்லியும் பேசியுள்ளார் முன்னாள் இந்திய அணி கிரிஸ் ஸ்ரீகாந்த்.

அவர் பேசுகையில் :ஹைதராபாத் அணிக்கு எதிராக ஆரசிபியின் பந்துவீச்சாளர்கள் ரீஸ் டாப்லி அடித்து நொறுக்கப்படுகிறார். லாக்கி பெர்குசன் அடித்து நொறுக்கப்பட்டார். அவர் ஐபிஎல்லில் சிறப்பாக செயல்படவில்லை. அவர் கொல்கத்தாவில் இருந்து பெங்களூரு வரை பயணம் செய்துள்ளார். வில் ஜாக்ஸ் அவர்களின் சிறந்த பந்துவீச்சாளராக இருந்தார்.
என்னை பொறுத்தவரையில் ஆர்சிபி 11 பேட்டர்களை கொண்டு விளையாடுவது நல்லது. ஃபாஃப் டு பிளெசிஸை 2 ஓவர்கள் வீசச் சொல்லுங்கள். கேமரூன் கிரீனுக்கு 4 ஓவர்களைக் கொடுங்கள். விராட் கோலி 4 ஓவர்கள் வீசியிருந்தால் இவ்வளவு அதிகமாக ரன்களை ஹைதராபாத் அணிக்கு எதிராக கொடுத்திருக்க மாட்டார் என்று நான் நினைக்கிறேன். விராட் கோலி ஒரு ஒழுக்கமான பந்துவீச்சாளர் என்றார் கிரிஸ் ஸ்ரீகாந்த்

மேலும் பேசிய அவர் ஆர்சிபி அணியின் நிர்வாகம் குறித்தும் கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார். அவர் கூறியதாவது : ஒரு கட்டத்தில் ஸ்டேடியத்திற்கு வெளியே பந்துகளை ஹைதராபாத் அணி பறக்க வைத்து கொண்டிருந்த நேரத்தில் விராட் கோலியை பார்க்கும் போது பாவமாக இருந்தது. அவர் பேட்டிங் செய்ய வந்ததுமே அதிரடியாக விளையாட தொடங்கினார்.

ஆர்சிபி அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் முகமது சிராஜை அணியில் இருந்து தூக்கினார்கள், கிளென் மேக்ஸ்வெல்லை தூக்கினார்கள். மேலும் 17.5 கோடிக்கு வாங்கப்பட்ட கேமரூன் கிரீனையும் தூக்கினார்கள். 11.5 கோடிக்கு வாங்கப்பட்ட அல்ஜாரி ஜோசப்பை இறக்கிவிட்டார்கள். நான் ஆர்சிபியின் வீரர்களை குறை கூறவில்லை. அவர்களின் அணியின் நிர்வாகம் எந்த திட்டமும் இல்லாமல் ஏலத்திற்கு சென்றதை தான் குறை கூறுகிறேன் என்றார் கிரிஸ் ஸ்ரீகாந்த்.





