ஐபிஎல் 2023 தொடரின் 68-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் மோதின. இந்த போட்டியில் லக்னோ அணி வென்றால் மூன்றாவது அணியாக ப்ளே ஆப்பிற்கு தகுதி பெரும். கொல்கத்தா அணி ப்ளே ஆப்பிற்கு தகுதி பெற வாய்ப்பு குறைந்த அளவே உள்ளது. டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் ராணா பௌலிங்கை தேர்வு செய்தார்.

லக்னோ அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஆரம்பம் முதலே நிதானமாக விளையாடி வந்தனர். கரண் ஷர்மா 3 ரன்களிலே ஆட்டமிழந்து வெளியேறினார். அதன் பிறகு வந்த ப்ரேரக் மன்கட் நிதானமாகவே விளையாடி வந்த நிலையில் 26 ரன்களில் வெளியேறினார். அதன் பிறகு வந்த ஸ்டானிஸ் அதிரடியாக விளையாடி ரன்களை உயர்த்துவார் என எதிர் பார்த்த நிலையில் ரன் ஏதும் எடுக்காமல் அவுட்டாகி வெளியேறினார்.
அதன் பின் வந்த க்ருனால் பாண்டியா 9 ரன் இருந்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினார். நிதானமாக விளையாடி வந்த டி காக் 28 ரன்களில் ஆட்டமிழக்க லக்னோ அணி திணறி வந்தது. பதோனி 25 ரன்களிலும் வெளியேற, மற்றொரு புறம் பூரான் அதிரடியாக விளையாடி அரை சதத்தை பூர்த்தி செய்தார். அதன் பின் அவரும் 58 ரன்களில் வெளியேறினார். அதன் பின் வந்த வீரர்கள் திணறி வர 20 வது ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்களை குவித்தது லக்னோ அணி.

இந்நிலையில் இந்த போட்டி லக்னோவிற்கு மட்டுமல்லாமல் சென்னைக்கும் மிக முக்கியமான போட்டி ஏனெற்றால் சென்னையும் லக்னோவும் இந்த போட்டிக்கு முன்னதாக ஒரே புள்ளிகளுடன் NRR மட்டுமே சில ரன்கள் விதியசத்தில் இருந்தது. மேலும் இரட்னு அணிகளும் 2 மற்றும் 3ஆம் இடங்களில் இருந்தது. ஆனால் இன்று நடந்த சென்னை vs டெல்லி போட்டியில் சென்னை 77 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதனால் தற்போது 17 புள்ளிகளுடன் 2 வது இடத்தில் இருக்கிறது. ஒரு வேளை இந்த போட்டியில் லக்னோ அதிக ரன்கள் வித்தியாத்தில் வெற்றி பெற்றால் 17 புள்ளிகளுடன் அதிகமாக NNR புள்ளிகளும் லக்னோ அணிக்கு கிடைக்கும். இதனால் சென்னை அணி 3வது இடத்திற்கு வர வாய்ப்பிருக்கிறது. இருந்த போதிலும் கொல்கத்தா பேட்டிங் சிறப்பாக இருப்பதினால் அப்படி நடக்க வாய்ப்பு மிகவும் குறைவு என்பது குறிப்பிடதக்கது.





