
உலக ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டு இருந்த ஐபிஎல் 2024 தற்போது மார்ச் 22 முதல் தொடங்கும் தற்போது வரை கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அதில் இன்று ஞாயற்று கிழமை என்பதினால் இன்று இரண்டு போட்டிகள் நடக்கிறது. இரண்டாவது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் லக்னோவில் உள்ள ஏகனா மைதானத்தில் பலபரீட்சை செய்ததது. லக்னோ அணி இதற்க்கு முன் நடந்த மூண்டு போட்டிகளில் 2 வெற்றி பெற்றும் ஒரு போட்டியில் தோல்வியை தழுவி இருந்தது. அதே போல் குஜராத் அணி இதற்க்கு முன் நடந்த நான்கு போட்டிகளில் இரண்டில் வெற்றி பெற்றும் இரண்டில் தோல்வியை தழுவியும் விளையடியது.

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் கே.எல் ராகுல் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். லக்னோ அணியின் தொடக்க வீரர்கள் சிறப்பாக ரன்களை குவிக்க முடியவில்லை என்றாலும் அதன் பின் வந்த மிடில் ஆர்டர் வீரர்கள் அவர்களது கடமையை அவர்கள் சரியாக செய்து இருந்தார்கள். இதற்க்கு முன் லக்னோ மற்றும் குஜராத் அணிகள் மோதிய நான்கு போட்டிகளிலும் குஜராத் அணியின் கைகளே ஓங்கி இருந்தது. அதாவது நான்கு போட்டிகளிலும் குஜராத் அணியே வெற்றி பெற்று இருந்தது.

லக்னோ அணியின் தொடக்க வீரரான டி காக 6 ரன்னிலே ஆட்டமிழந்து அவர் வெளியேறினார்.அதன் பின் வந்த படிக்கல் 7 ரன்னிலும் ஆட்டமிழந்து வெளியேறினார். அதன் பின் நிதானமாக விளையாடிவந்த ராகுல் 33 ரன்னிலும் ஆட்டமிழந்தார். மிடில் ஆர்டரில் பலம் சேர்க்கும் வகையில் ஸ்டாய்னிஸ் 58 ரன்னிலும் ஆட்டமிழந்து வெளியேறினார். இறுதியில் பூரன்(32) மற்றும் பதோனியின்(20) சிறப்பான ஆட்டத்தால் இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து லக்னோ அணி 163 ரன்களை மட்டுமே குவித்தது.
164 ரன்களை இலக்காகக் கொண்டு களமிறங்கிய குஜராத் அணி ஆரம்பத்தில் இருந்தே தடுமாறியே விளையாடி வந்தது. லக்னோ அணியின் சிறப்பான பந்துவீச்சால் குஜராத் அணி தடுமாறியே இருந்தது. குஜராத் அணி 130 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. எனவே லக்னோ அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதில் அதிகபட்சமாக சாய் சுதர்ஷன் 31 ரன்களும் நல்கண்டே 30 ரன்களையும் கில் 19 ரன்களையும் அடித்து இருந்தார்.

இவர்களை தவிர மற்ற வீரர்கள் யாரும் சிறப்பாக செயல்படவில்லை. லக்னோ அணியின் பந்துவீச்சு சிறப்பாகவே இருந்தது அதிலும் யாஷ் தாக்கூர் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி குஜரத் அணியை சுருட்டி இருந்தார். அவர் நான்கு ஓவர்களை வீசி 30 ரன்களை மட்டுமே விட்டுகொடுத்து தலா ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தி இருந்தார். இதற்க்கு முன் லக்னோ மற்றும் குஜராத் அணிகள் மோதிய நான்கு போட்டிகளிலும் குஜராத் அணியின் கைகளே ஓங்கி இருந்தது. அதாவது நான்கு போட்டிகளிலும் குஜராத் அணியே வெற்றி பெற்று இருந்தது. அதை லக்னோ அணி இன்று மாற்றி அமைத்து இருந்தது





